/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சென்னை - பெங்., விரைவு சாலை சுங்க கட்டணங்கள் அறிவிப்பு
/
சென்னை - பெங்., விரைவு சாலை சுங்க கட்டணங்கள் அறிவிப்பு
சென்னை - பெங்., விரைவு சாலை சுங்க கட்டணங்கள் அறிவிப்பு
சென்னை - பெங்., விரைவு சாலை சுங்க கட்டணங்கள் அறிவிப்பு
ADDED : ஜூலை 30, 2025 08:57 AM

கோலார் : திறப்பு விழாவிற்கு முன்னதாகவே சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை வழித்தடத்தில் சுங்க கட்டணங்களை என்.எச்.ஏ.ஐ., எனும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்ணயித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹொசகோட், மாலுார், பங்காருபேட்டை, பேத்தமங்களா, தங்கவயல் பெமல் நகர் வழியே சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை வழித்தடமானது, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னையை பெங்களூருடன் இணைக்கிறது. இது மொத்தம் 288 கி.மீ., நீளம் கொண்டது.
பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை குறைப்பதும் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. கர்நாடகாவுக்கு உட்பட்ட பகுதியில் 71 கி.மீ., இந்த சாலை செல்கிறது. இந்த பகுதியில் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. இதற்காக ஏறக்குறைய 17,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக சாலை திறக்கப்படாவிட்டாலும் கூட, கர்நாடக எல்லைக்குள் சாலையில் கடந்த ஏழு மாதங்களாக போக்குவரத்து நடைபெறுகிறது.
அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கிலோமீட்டர். சில இடங்களில் அறிவியல் பூர்வமாக சாலை அமைக்கப்படாததால் விபத்துகள் நேர்வதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடகாவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த வழித்தடத்தில் கர்நாடகாவின் எல்லைக்குள் ஹொசகோட் அருகே ஹெடிகெனபேலே, மாலுார் அக்ரஹாரா, கிருஷ்ணராஜபுரா, தங்கவயல் அருகே சுந்தரப்பாளையா ஆகிய நான்கு இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது.
இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பயணம் செய்யும் தொலைவின் அடிப்படையில் அவற்றுக்கான கட்டணங்களை என்.எச்.ஏ.ஐ., முதன்முறையாக நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே மாதாந்திர பாஸ் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முடிவாகவில்லை சுங்கவரி வசூல் செய்வதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதிகாரியுடன் கலந்துரையாடிய பிறகு முடிவு எடுக்கப்படும். எம்.மல்லேஸ்பாபு, எம்.பி., கோலார்.
சென்னை - பெங்களூரு விரைவு சாலை வழித்தடத்தில் தற்போது சுங்கவரி வசூல் செய்யப்படவில்லை. இதை செயல்படுத்துவதற்கு முன்பு, பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவோம். -அர்ச்சனா, திட்ட இயக்குநர், சென்னை - பெங்களூரு விரைவு வழித்தடம்