/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சென்னை -- பெங்., காரிடாரில் வாகனங்கள் மோதலில் 3 பேர் பலி
/
சென்னை -- பெங்., காரிடாரில் வாகனங்கள் மோதலில் 3 பேர் பலி
சென்னை -- பெங்., காரிடாரில் வாகனங்கள் மோதலில் 3 பேர் பலி
சென்னை -- பெங்., காரிடாரில் வாகனங்கள் மோதலில் 3 பேர் பலி
ADDED : அக் 08, 2025 08:13 AM
பங்கார்பேட்டை : சென்னை -- பெங்களூரு எக்ஸ்பிரஸ் காரிடார் சாலையில் இரவு நடந்த வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் காயம் அடைந்தனர்.
பங்கார்பேட்டை அருகே 'ஒய் ஸ்பேஸ்' என்ற ஐ.டி., நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன் தினம் நடந்தது. இதில், ஹொஸ்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பச்சே கவுடா பங்கேற்றார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு உணவு சமைக்க, பெங்களூரில் உள்ள ஏ.சி.சி., கேட்டரிங் கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்திருந்தனர். இவர்கள், தங்கள் பணியை முடித்துக்கொண்டு பெங்களூருக்கு டெம்போவில், சென்னை -- பெங்களூரு எக்ஸ்பிரஸ் காரிடார் சாலையில் சென்றனர்.
பங்கார்பேட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்கெரே என்ற இடத்தில், வாகன ஓட்டுநர், சாலை மையத்தடுப்பில் மோதியுள்ளார்.
இதன் பின்னே வந்த சரக்கு வாகனம், சமையல்காரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதியது. இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனமும் விபத்தில் சிக்கியது. இச்சம்பவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் சிவராஜ், 38, சமையல் வாகனத்தில் வந்த விக்ரம் பால், 40, அசோக், 34, ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் பங்கார்பேட்டை, தங்கவயல், கோலார் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சமையல் கேட்டரிங் பணியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும், மங்களூரின் குந்தாபூரை சேர்ந்தவர்கள் ஆவர்.
தகவல் அறிந்த தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவம்ஷு ராஜ்புத், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
சென்னை -- பெங்களூரு எக்ஸ்பிரஸ் காரிடார் சாலையில் இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இச்சாலையில், ஹொஸ்கோட் -- பங்கார்பேட்டை வரை மட்டுமே பணிகள் முடிந்துள்ளன. இப்பகுதியில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளன.
இச்சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதும், உயிர் பலியாவதும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேலும் தேவைப்படுகிறது.