/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்.,கில் நடந்த கை மல்யுத்த போட்டி சென்னை வீரருக்கு 2 தங்க பதக்கம்

ADDED : நவ 08, 2025 11:08 PM

பெங்களூரு: பெங்களூரில் நடந்த கை மல்யுத்த போட்டியில், சென்னை வீரர் மனிஷ் முகுந்தன், இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினார்.
பெங்களூரு ஞானபாரதியில் உள்ள, பெங்களூரு பல்கலைக்கழகம் எதிரில், 'பேஸ்கேம்' புஷ் அகாடமி உள்ளது. இந்த அகாடமி சார்பில், பல மாநிலங்களை சேர்ந்த வீரர்களுக்கான, கை மல்யுத்த போட்டிகள் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தன.
நேற்று நடந்த போட்டியில் 90 கிலோ சீனியர் பிரிவில், சென்னை கெரும்பாக்கம் வீரர் மனிஷ் முகுந்தன், 22, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சேலத்தின் விக்னேஷ், அந்தமான் நிகோபர் சுபம் ஆகியோரை வீழ்த்தி, இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று, முதலிடம் பிடித்து அசத்தினார்.
வலது கை மல்யுத்த போட்டியில் விக்னேஷையும், இடது கை மல்யுத்தத்தில் சுபத்தையும் வீழ்த்தி இருந்தார். வலது கை போட்டியிலும், இடது கை போட்டியிலும் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.