sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சென்னை - மைசூரு ரயில் அசோகபுரம் வரை நீட்டிப்பு

/

சென்னை - மைசூரு ரயில் அசோகபுரம் வரை நீட்டிப்பு

சென்னை - மைசூரு ரயில் அசோகபுரம் வரை நீட்டிப்பு

சென்னை - மைசூரு ரயில் அசோகபுரம் வரை நீட்டிப்பு


ADDED : ஏப் 04, 2025 06:46 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'பயணியர் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - மைசூரு நகர ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த ரயில்கள், வரும் 7 ம் தேதி முதல் மைசூரு அசோகபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

ரயில் எண் 16021: சென்னை சென்ட்ரல் - மைசூரு விரைவு ரயில், மைசூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு காலை 6:45 மணிக்கு வந்தடையும்; 5 நிமிடம் நிற்கும். அங்கிருந்து புறப்பட்டு அசோகபுரம் ரயில் நிலையத்தை காலை 7:00 மணிக்கு சென்றடையும். இந்த மாற்றம், வரும் 7ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எண் 16022: மைசூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், அசோகபுரம் ரயில் நிலையத்தில் இருந்து, இரவு 8:40 மணிக்கு புறப்படும். மைசூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு இரவு 8:50க்கு வந்தடையும்; 10 நிமிடம் நிற்கும். இந்த மாற்றம், வரும் 8 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எண் 16551: சென்னை சென்ட்ரல் - மைசூரு விரைவு ரயில், மைசூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு இரவு 10:50 மணிக்கு வந்தடையும்; 10 நிமிடம் நிற்கும். அசோகபுரம் ரயில் நிலையத்துக்கு இரவு 11:10 மணிக்கு சென்றடையும். இந்த மாற்றம், வரும் 7 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எண் 16552: மைசூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், அசோகபுரம் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4:45 மணிக்கு புறப்படும். மைசூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு 4:55 மணிக்கு வந்தடையும்; 20 நிமிடம் நிற்கும். இந்த மாற்றம், வரும் 8 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

12785 ஹைதராபாத் காச்சிகுடா - மைசூரு விரைவு ரயில், மைசூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு காலை 10:15 மணிக்கு வந்தடையும்; 10 நிமிடம் நிற்கும். அசோகபுரம் ரயில் நிலையத்துக்கு காலை 10:40 மணிக்கு சென்றடையும். இந்த மாற்றம், வரும் 7 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எண் 12786: மைசூரு - ஹைதராபாத் காச்சிகுடா ரயில், அசோகபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்படும். மைசூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு மதியம் 3:05க்கு வந்தடையும்; 10 நிமிடம் நிற்கும். இந்த மாற்றம், வரும் 8 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எண் 20624: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மைசூரு ரயில், மைசூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு மாலை 4:30 மணிக்கு வந்தடையும்; 10 நிமிடம் நிற்கும். அசோகபுரம் ரயில் நிலையத்திற்கு மாலை 5:00 மணிக்கு சென்றடையும்.

எண் 20623: மைசூரு - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில், அசோகபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8:30 மணிக்கு புறப்படும். மைசூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு 8:40 மணிக்கு வந்தடையும்; 10 நிமிடம் நிற்கும். இவ்விரு ரயில்களின் மாற்றம், வரும் 8 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us