/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெளியே செல்ல அஞ்சும் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் அசோக் காட்டம்
/
வெளியே செல்ல அஞ்சும் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் அசோக் காட்டம்
வெளியே செல்ல அஞ்சும் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் அசோக் காட்டம்
வெளியே செல்ல அஞ்சும் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் அசோக் காட்டம்
ADDED : ஏப் 11, 2025 06:58 AM

பெங்களூரு: 'ஊழலில் நாட்டிலேயே கர்நாடகா நம்பர் ஒன் இடத்தில் உள்ளது' என்று முதல்வர் சித்தராமையாவின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக, பெங்களூரில் நேற்று அசோக் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் காங்கிரசின் 20 மாத ஆட்சியில், முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டியே, கர்நாடகாவில் ஊழல் நடக்கிறது என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.
பா.ஜ.,வின் 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை'க்கு மக்கள் அளிக்கும் ஆதரவு, மாநில அரசின் மீது அவர்கள் எவ்வளவு கோபத்தில் உள்ளனர் என்பதை காட்டுகிறது.
மாநிலத்தில் மோசமான ஆட்சி நடக்கிறது. தனது தவறை மூடி மறைக்க முயற்சிக்கிறது. சித்தராமையாவின் அரசின் உண்மையான எண்ணம் 20 மாதங்களில் தெரிந்துவிட்டது. அறிவியலற்ற வாக்குறுதி திட்டத்தால், மாநில அரசின் கஜானா காலியாகிவிட்டது. ஒரு மேம்பாட்டு பணிகளும் நடக்கவில்லை.
வெளியே சென்றால் பொது மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அஞ்சியே, தான் முதல்வரும், அமைச்சர்களும் எங்கும் செல்வதில்லை.
பெங்களூரில் அமர்ந்து கொண்டு நேரத்தை வீணடிக்கின்றனர். கர்நாடகாவின் தலைமை செயலகம், கேரள மாநிலம், வயநாட்டில் இருந்து தான் நடக்கிறது. இதற்கு உதாரணம், புலிகள் பாதுகாப்பு பகுதியான, சாம்ராஜ்நகர் ஹிமாவத் கோபாலசுவாமி மலையில் மலையாள திரைப்படம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணம்.
அரசு தரப்பில் அனுமதி அளித்ததாக, உதவி வன அதிகாரி தெரிவித்து உள்ளார். அரசு தரப்பு என்றால் யார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

