/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுடன் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை
/
கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுடன் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை
கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுடன் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை
கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுடன் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை
ADDED : மே 09, 2025 11:41 PM

பெங்களூரு: பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது.
இன்று மாலை 4:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், போலீஸ் கமிஷனர்களுடன், முதல்வர் சித்தராமையா பெங்களூரில் ஆலோசனை நடத்துகிறார்.
முதல்வர் சித்தராமையா தலைமையில், அமைச்சரவை கூட்டம், பெங்களூரில் நேற்று மாலை நடந்தது.
கூட்டம் முடிந்த பின் சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
அமைச்சரவை கூட்டத்தில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் ஓய்வு வயது, 60 லிருந்து 65 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1,500 கோடி ரூபாய் செலவில், சரகூரில் இருந்து ஹொசபுராவுக்கு மேம்பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
தவிர 90 கோடி ரூபாய் செலவில், சத்தேகாலா குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்ததால், ராம்நகர், மாகடி, குனிகல் தாலுகாக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை சார்பில், கல்வி மற்றும் பொருளாதார ஆய்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆய்வு நடத்தும்படி அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அடுத்த வாரம் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பின், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது.
எனவே இன்று மாலை 4:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், போலீஸ் கமிஷனர்களுடன், முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்துகிறார்.
வரும் 20ம் தேதி நடக்கவிருந்த, மாநில அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

