/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தகுதியற்ற பி.பி.எல்., கார்டுகள் ரத்து அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
/
தகுதியற்ற பி.பி.எல்., கார்டுகள் ரத்து அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
தகுதியற்ற பி.பி.எல்., கார்டுகள் ரத்து அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
தகுதியற்ற பி.பி.எல்., கார்டுகள் ரத்து அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
ADDED : செப் 09, 2025 05:07 AM
பெங்களூரு: பஞ்சாயத்து அளவில் தகுதியற்ற பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்ய, அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரில் முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், தகுதியற்ற பி.பி.எல்., கார்டுதாரர்களின் கார்டுகளை ரத்து செய்வது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களின் பலன், தகுதியானவர்களுக்கு செல்வதை உறுதி செய்யும் வகையில், தகுதியற்ற பி.பி.எல்., கார்டுதாரர்களை அடையாளம் கண்டு, ரத்து செய்யுங்கள். ஐந்து வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற, இதுவரை 97,813 கோடி ரூபாய் அரசு செலவழித்துள்ளது.
அரசின் வாக்குறுதி திட்டத்தை பெறும் பயனாளிகள் உயிருடன் உள்ளனரா, இல்லையா என்பதை பஞ்சாயத்து அளவில் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். அது தொடர்பான தகவலை, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பயனாளிகள் இறந்தால், அவர்களின் பெயரை நீக்க வேண்டும்.
'அன்னபாக்யா' அரிசியை, கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அதேவேளையில், அரிசிக்கு பதிலாக மற்ற உணவு பொருட்கள் இருப்பில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.