/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆணவமாக பேசிய வங்கி மேலாளர் இடமாற்றத்துக்கு முதல்வர் பாராட்டு
/
ஆணவமாக பேசிய வங்கி மேலாளர் இடமாற்றத்துக்கு முதல்வர் பாராட்டு
ஆணவமாக பேசிய வங்கி மேலாளர் இடமாற்றத்துக்கு முதல்வர் பாராட்டு
ஆணவமாக பேசிய வங்கி மேலாளர் இடமாற்றத்துக்கு முதல்வர் பாராட்டு
ADDED : மே 22, 2025 05:05 AM
ஆனேக்கல்: 'வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச முடியாது' என ஆணவமாக கூறிய எஸ்.பி.ஐ., வங்கியின் பெண் மேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு முதல்வர் சித்தராமையா பாராட்டு தெரிவித்து உள்ளார்.
ஆனேக்கல் தாலுகா சூர்யா நகரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் பெண் மேலாளர், 'கன்னடத்தில் பேச முடியாது' என கூறி வாடிக்கையாளரிடம் நேற்று முன்தினம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது வீடியோவாக இணையத்தில் பரவியது. வீடியோவில், 'கன்னடத்தில் பேச மாட்டேன். ஹிந்தியின் தான் பேசுவேன். நீங்கள் ஒண்ணும் எனக்கு வேலை கொடுக்கவில்லை' என்றார்.
இதற்கு பதிலடியாக வாடிக்கையாளர், 'கர்நாடாகாவில் முதலில் கன்னடம் தான். பிறகு தான் மற்ற மொழிகள்' என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. ஆணவமாக பேசிய வங்கி மேலாளருக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அந்த வங்கி மேலாளரை இடமாற்றம் செய்து எஸ்.பி.ஐ., வங்கி உத்தரவிட்டது.
இதை பாராட்டி நேற்று முதல்வர் சித்தராமையா தன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டதாவது:
கன்னடம், ஆங்கிலம் பேச முடியாது என கூறிய வங்கி மேலாளரின் நடத்தை கண்டனத்திற்குரியது. அவரை இடமாற்றம் செய்ததற்கு வங்கி நிர்வாகத்திற்கு பாராட்டுகள். இத்துடன், இவ்விஷயம் முடிவடைந்து உள்ளது.
அதே சமயம், மீண்டும் ஒரு முறை இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. அனைத்து வங்கிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களும், தங்கள் வாடிக்கையாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அதேபோல, பிராந்திய மொழிகளை பேச முயற்சிக்கவும்.
பல மாநிலங்களில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், பிராந்திய மொழி, வாடிக்கையாளர்களை மரியாதையுடன் நடத்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.