/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு விமான நிலைய விரிவாக்க பணி; மத்திய அமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை
/
மைசூரு விமான நிலைய விரிவாக்க பணி; மத்திய அமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை
மைசூரு விமான நிலைய விரிவாக்க பணி; மத்திய அமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை
மைசூரு விமான நிலைய விரிவாக்க பணி; மத்திய அமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை
ADDED : ஏப் 05, 2025 01:31 AM

மைசூரு விமான நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை, முதல்வர் சித்தராமையா சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
புதுடில்லி சென்றுள்ள முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர், பல்வேறு துறை மத்திய அமைச்சர்களை சந்தித்து, மாநிலத்திற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.
டில்லியில் சந்திப்பு
இந்நிலையில், நேற்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் சந்தித்து பேசினர். அப்போது கோரிக்கை மனு வழங்கினர்.
மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
மைசூரு விமான நிலைய மேம்பாட்டுக்காக 2005 அக்டோபர் 6ல் மத்திய விமான நிலைய ஆணையத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இதன்படி, விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான கூடுதல் நிலத்தை கையகப்படுத்திய பின், மீதமுள்ள நிலத்தை, மீண்டும் அரசுக்கு எந்தவித கட்டணமும் இன்றி, இலவசமாக வழங்க வேண்டும்.
அதன்படி, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு, தேவையான நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மைசூரு விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிக்கான அனைத்து மூலதனம், பிற செலவுகளையும், இந்திய விமான நிலைய ஆணையம் ஏற்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில், மாநில அரசு, 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்த, 319.14 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.
ரூ.101.84 கோடி
அதுபோன்று, விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் பகுதியில் உள்ள ஏழு கால்வாய்கள், இரண்டு பள்ளங்களை இடமாற்றம் செய்ய, 70 கோடி ரூபாய் செலவாகும் என, 2024 நவம்பரில் காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன், அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.
இப்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்சார ஒயர்களையும், குறைந்த அழுத்த மின்சார ஒயர்களையும் இடமாற்றம் செய்ய 31.82 கோடி ரூபாய் செலவாகும் என்று கே.பி.டி.சி.எல்., எனும் கர்நாடக மாநில மின் பகிர்மான கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, விமான நிலையம் விரிவுபடுத்துவதற்காக கையகப்படுத்தப்படும் 240 ஏக்கர் நிலத்துக்கான 319.14 கோடி ரூபாயை, மாநில அரசே ஏற்கும். அதேவேளையில், கால்வாய்கள், மின்சார ஒயர்கள் இடமாற்றம் செய்வதற்கான, 101.84 கோடி ரூபாயை, இந்திய விமான நிலைய ஆணையமே ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -