தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முதல்வர் சிவகுமார் - தொழிலதிபர் கவுதம் அதானி திடீர் சந்திப்பு

 முதல்வர் சிவகுமார் - தொழிலதிபர் கவுதம் அதானி திடீர் சந்திப்பு

 முதல்வர் சிவகுமார் - தொழிலதிபர் கவுதம் அதானி திடீர் சந்திப்பு


ADDED : ஆக 23, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: முதல்வர் சிவகுமாரை, தொழிலதிபர் கவுதம் அதானி சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் சுரங்கப்பாதை சாலை அமைப்பது தொடர்பாக, டெண்டர் முடிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெங்களூரில் நேற்று, வாழும் கலை அமைப்புக்கு சென்றிருந்த கவுதம் அதானி, அந்நிகழ்ச்சியை முடித்து கொண்டு சதாசிவ நகரில் உள்ள முதல்வர் சிவகுமார் வீட்டுக்கு சென்றார். இருவரும் 20 நிமிடங்கள் வரை பேச்சு நடத்தினர். அதன் பின், அதானியை வீட்டின் வாசல் வரை வந்து சிவகுமார் வழியனுப்பி வைத்தார்.

இந்திய தொழிலதிபரான கவுதம் அதானியை காங்கிரஸ் தலைவர்களான ராகுல், சோனியா என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகுமார், கவுதம் அதானி சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுரங்கப்பாதை சாலை பெங்களூரில் ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு வரை, 17 கி.மீ., துாரத்துக்கு சுரங்கப்பாதை சாலை அமைக்க, மாநில அரசு டெண்டர் அழைத்திருந்தது. இத்திட்டத்துக்கு, 17,698 கோடி ரூபாய் என்று அரசு நிர்ணயித்திருந்தது. ஆனால், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனமோ, இத்திட்டத்தை செயல்படுத்த குறைந்தபட்சமாக, 22,267 கோடி ரூபாய்க்கு ஏலம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

அரசு நிர்ணயித்த தொகையை விட, அதானியின் ஏலத்தொகை, 4,600 கோடி ரூபாய், அதிகமாக இருந்தது. ஆனாலும், டெண்டரில் பங்கேற்ற மற்ற நிறுவனங்களின் ஏலத்தொகையை விட, அது குறைவாக இருந்தது. இதனால் அந்நிறுவனம் குறைந்தபட்ச ஏலதாரராக தேர்ந்தெடுக்கப்பட்டது.

முக்கியத்துவம் டெண்டர் செயல்முறையில் அதானி மிக குறைந்த விலையை சமர்ப்பித்ததால், அடுத்த கட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் தனது ஒப்பந்த முன்மொழிவை ஏற்கனவே அரசிடம் சமர்ப்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும், பணியை அதிகாரபூர்வமாக ஒப்படைக்கும் செயல்முறை இன்னும் நிறைவடையவில்லை.

இத்திட்டத்திற்காக மதிப்பிட்ட செலவு தொகையை விட, ஒப்பந்த தொகை அதிகமாக இருப்பதால், அரசின் அடுத்த கட்ட முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூடுதல் செலவு தொடர்பாக, மாநில அமைச்சரவையில் விவாதிக்கப்படும்; அதன் பின் இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்.

நில அளவீடு திட்ட ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னரே, சுரங்கப்பாதை செல்லும் பகுதிகளில் அதானி சில முக்கியமான ஆரம்பகட்ட தொழில்நுட்ப பணிகளை மேற் கொண்டுள்ளது. சுரங்கப்பாதை வழித்தடத்தின் பல்வேறு பகுதிகளில் நில அளவீடு மற்றும் மண் தரம் குறித்து பரிசோதனையை நடத்தி உள்ளது.

சுரங்கப்பாதை கட்டுமானம் போன்ற ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தில், புவியியல் நிலைமைகள், மண்ணின் தரம், நீர் மட்டம், கட்டுமான பாதையின் தொழில்நுட்ப சாத்திய கூறு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இந்த ஆய்வுகளால், திட்டத்தை செயல்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

இது தவிர, மாநிலத்தில் வணிக வாய்ப்புகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படு கிறது.

இந்த சந்திப்பு குறித்து முதல்வர் சிவகுமார் கூறியதாவது:

நான் முதல் முறையாக முதல்வரான பின், என்னை சந்திக்க நீண்ட நாட்களாக, கவுதம் அதானி நேரம் கேட்டிருந்தார்.

கர்நாடகா வந்த அவர், மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார்; வேறு எதுவும் இல்லை. அவர் நம் மாநிலத்தில் பல்வேறு பணிகளை செய்கிறார். வேறு எதுவும் விவாதிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவப்பு கம்பள வரவேற்பு எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டி:

தொழிலதிபர் அதானியை பா.ஜ.,வின் ஏஜன்ட் என்று ராகுல் கூறினார். ஆனால், கர்நாடக காங்கிரஸ் அரசோ, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உள்ளது. இதற்கு அக்கட்சி தலைவர்கள் அனுமதி அளித்தனரா...

டில்லியில் அதானியை எதிர்க்கும் அவர்கள், கர்நாடக அரசு அவருக்கு ஆதரவாக செயல்படுவது, அக்கட்சியின் இரட்டை நிலைபாட்டை காட்டுகிறது.

சுரங்கப்பாதைக்காக பூங்காக்கள், ஏரிகள் இருந்த நிலத்தை அபகரிக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டால், பணம் செலுத்த வேண்டும். அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. அதற்கு மாற்றாக, ஒரு மசோதா தயாரித்திருப்பது சட்ட விரோதம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us