தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜம்பு சவாரி ஊர்வலத்தின் முன் அபிமன்யு யானை செல்லுமா?

 ஜம்பு சவாரி ஊர்வலத்தின் முன் அபிமன்யு யானை செல்லுமா?

 ஜம்பு சவாரி ஊர்வலத்தின் முன் அபிமன்யு யானை செல்லுமா?


ADDED : ஆக 23, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மைசூரு தசரா ஜம்பு சவாரியின் போது, தங்க அம்பாரியை சுமந்து வந்த அபிமன்யு யானைக்கு, 60 வயது கடந்ததால், பிரிவுபசார விழா நடத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது.

மைசூரு தசராவில், 2020 முதல், 2025 வரை ஆறு ஆண்டுகளாக ஜம்பு சவாரியன்று, 750 கிலோ எடை உள்ள தங்க அம்பாரியை, அபிமன்யு யானை சுமந்து வந்தது. இந்தாண்டு யானைகள் தேர்வில் அபிமன்யு இடம் பெறவில்லை. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதிருப்தி இது தொடர்பாக வனத்துறையினரிடம் கேட்டபோது, 'அபிமன்யுவுக்கு, 60 வயது கடந்து விட்டதால், ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது' என்றனர். இதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேவேளையில், பலராமன், அர்ஜுனா யானைகள், 60 வயதை கடந்த பிறகும், தசராவில் பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடந்த, 1970ல், குடகு மாவட்டம், ஹெப்பல்லா பகுதியில், அபிமன்யுவை வனத்துறையினர் பிடித்தனர். குடகில் உள்ள மத்திகோடு முகாமில் பராமரிக்கப்பட்டது. 50 ஆண்டுகளாக வனத் துறையில் பணியாற்றி வரும் அபிமன்யுக்கு தற்போது, 61 வயதாகிறது. 5,000 கிலோ எடை கொண்ட அபிமன்யு, 2.672 மீட்டர் உயரமும், 3.51 மீட்டர் நீளமும் உள்ளது .

பிரிவுபசார விழா தசரா ஊர்வலத்தில் மட்டுமின்றி, ஊருக்குள் நுழையும் மற்ற காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகளை பிடிக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றி உள்ளது. இதுவரை, 150க்கும் மேற்பட்ட யானைகள், 60க்கும் மேற்பட்ட புலிகளை பிடிக்கும் பணியில் இந்த யானை பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, அபிமன்யுவுக்கு உரிய மரியாதையுடன் பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக, முந்தைய வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே, தற்போதைய வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:

அபிமன்யு யானைக்கு, 60 வயது நிறைவடைந்ததால், இந்தாண்டு தசரா யானைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. திடீரென விழாவில் இருந்து அந்த யானையை விலக்குவது, ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யும்.

இதற்கு முன் அர்ஜுனா, பலராமா ஆகிய யானைகளும், 60 வயதை கடந்த பிறகும், கவுரவமாக பிரிவுபசாரம் அளிக்கும் வகையில், ஜம்பு சவாரியின்போது, ஊர்வலத்தின் முன் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. அதுபோல, அபிமன்யுவுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us