விபத்தில் நொறுங்கிய மினி வேன் மூன்று பெண்கள் உயிரிழப்பு
விபத்தில் நொறுங்கிய மினி வேன் மூன்று பெண்கள் உயிரிழப்பு
ADDED : ஆக 23, 2026 11:08 PM
யாத்கிர்: கூலி தொழிலாளர்கள் சென்ற வாகனம், விபத்துக்கு உள்ளானதில், மூன்று பெண்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
யாத்கிர் மாவட்டம், ஷஹாபுரா தாலுகாவின், மட்னாளா கிராமம் அருகில் நேற்று அதிகாலை, மினி வேன் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலை ஓரம் புதிதாக அமைக்கப்பட்டிருந்த மின் கம்பம் மீது மோதியது .
மோதிய வேகத்தில் அந்த மினி வேன் நொறுங்கியது. இதில், அந்த வாகனத்தில் பயணித்த பாக்யஸ்ரீ, 35, சத்யம்மா, 30, ஹொன்ன நிங்கம்மா, 18, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
ஐந்து பேர் படுகாய மடைந்தனர். அங்கு வந்த பீமராயனகுடி போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் ஷஹாபுராவின், ஹளிசகரா கிராமத்தை சேர்ந்தவர்கள்.
பருத்தி நிலத்தில் களையெடுக்கும் பணிக்காக செல்லும் வழியில் விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்தை உயர் அதிகாரிகள், பார்வையிட்டனர்.
