தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மின் துறை தனியார் மயமாகாது முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்

 மின் துறை தனியார் மயமாகாது முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்

 மின் துறை தனியார் மயமாகாது முதல்வர் சிவகுமார் திட்டவட்டம்


ADDED : ஜூன் 30, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''மின் நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு உள்ளது,'' என முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கர்நாடக மின்சார பகிர்மான கழக ஊழியர்கள் சங்கம், தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

மின்சார கழகங்களின் தனியார்மயமாக்கலை தடுக்க நீங்கள் போராடுகிறீர்கள். இது, 2003ல் மத்தியில் பா.ஜ., அரசு இருந்த போது கொண்டுவரப்பட்ட முன்மொழிவாகும். அப்போது உங்களில் ஒருவர் கூட எதிர்க்கவல்லை; போராடவும் இல்லை; வெளிப்படையாக பேசவும் இல்லை.

இப்போது என்னிடமும், ஜார்ஜிடமும், மின்சார கழகங்களை தனியார் மயமாக்க அனுமதிக்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள். தவறு செய்பவர்களுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்து, நல்லது செய்வோரை பாராட்டும் போது தான், அதற்கு மரியாதை வரும்.

பா.ஜ., கொண்டு வந்த சட்டம் சரியில்லை என்று உங்கள் அமைப்புகளின் தலைவர்கள் யாராவது, எப்போதாவது வெளிப்படையாக பேசியுள்ளார்களா?

மும்பை, டில்லி உட்பட பல நகரங்களில் தனியார்மயமாக்கப்பட்டு உள்ளது. நுாற்றுக்கணக்கான ஆண்டுகள் மின் இணைப்புகளை அமைத்தது நீங்கள் தான். அரசும் உங்களுக்கு ஆதரவளித்து உள்ளது. மின் நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us