தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் கட்டுப்படுத்தணும்: சிவகுமார்

 எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் கட்டுப்படுத்தணும்: சிவகுமார்

 எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் கட்டுப்படுத்தணும்: சிவகுமார்


ADDED : பிப் 26, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை கட்டுப்படுத்த வேண்டியது நான் அல்ல. அவர்களை முதல்வரே கட்டுப்படுத்த வேண்டும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை கட்டுப்படுத்த வேண்டியது, நான் அல்ல. இவர்களை முதல்வரே கட்டுப்படுத்த வேண்டும். கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் என்றால், நான் டில்லியில் உள்ள மேலிடத்துக்கு தகவல் கூறுவேன்.

அமைச்சர் மஹாதேவப்பாவும், மேலிட தலைவர்தான். மாநிலத்தில் முதல்வர் மாற்றம் குறித்து, அவருக்கு தகவல் தெரிந்திருக்கும். எனவே அவர் தலித் முதல்வர் குறித்து பேசுகிறார். முன்னாள் அமைச்சர் ராஜண்ணா மிகவும் பெரியவர். அவர் பரமேஸ்வருக்கு முதலில் கூலி கொடுக்க வேண்டும் என, கூறியுள்ளார்.

அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, கட்சியின் மூத்த தலைவர். என்னுடன் செயல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நாங்கள் வாரம் ஒரு முறை, நேரில் சந்தித்து பேசுவோம். நாங்கள் சமமான மன நிலை உள்ளவர்கள். எங்கள் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த, திட்டம் வகுத்துள்ளோம்.

முதல் முறையாக எம்.எல்.ஏ.,வானவர்கள், அமைச்சர் பதவி கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை சரிதான். எம்.எல்.ஏ.,வே ஆகாத நரேந்திர மோடி, குஜராத் முதல்வராகவில்லையா. நானும் கூட முதல் முறையாக எம்.எல்.ஏ.,வான போது, அமைச்சர் பதவியில் அமர்ந்தேன். எம்.எல்.ஏ.,க்களை அமைச்சரவையில் சேர்க்க, எனக்கு அதிகாரம் இல்லை. அமைச்சரவையை மாற்றி அமைப்பதாக, முதல்வர் கூறியுள்ளார். அதன்படி மாற்றி அமைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us