தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இரு மொழி கொள்கையை ஏற்க முதல்வர் சித்தராமையா அழைப்பு

 இரு மொழி கொள்கையை ஏற்க முதல்வர் சித்தராமையா அழைப்பு

 இரு மொழி கொள்கையை ஏற்க முதல்வர் சித்தராமையா அழைப்பு


ADDED : மார் 30, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ''கல்வியில் இருமொழி கொள்கை என்பதை அனைவரும் ஏற்க வேண்டும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவில் இரு மொழி கொள்கை செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. கல்வியில் இரு மொழி கொள்கை என்ற முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை சிலர் எதிர்க்கின்றனர் என்பதற்காக, நாங்கள் பின் வாங்கமாட்டோம். அனைத்து கோணங்களையும் ஆராய்ந்த பின்னரே, அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது. அனைவரும் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தாண்டு முதலே தேர்வுகளில் செயல்படுத்தப்படும். எனவே, ஹிந்தி கற்கக்கூடாது என்று நான் கூறவில்லை.

ஆனால், கட்டாயமாக்க கூடாது என்றே கூறுகிறேன். நான் படித்த காலத்தில் ஹிந்தி கட்டாய பாடமாக இல்லை. அதனால் படித்ததே இல்லை.

எம்.எல்.ஏ., க்களுக்கு முன்னால் ஒரு ஐ.பி.எல்., டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இப்போது இரண்டு கொடுத்துள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம். இதில் சரி, தவறு என்ற கேள்விக்கு இடமில்லை.

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். வேறு வேலைகள் இல்லை என்றால் மட்டுமே கிரிக்கெட் பார்க்க செல்வேன். எனக்கு ஏப்., 9ம் தேதி வரை தேர்தல் பணிகள் உள்ளன. எனவே, அதுவரை எந்த போட்டியையும் பார்க்க போகமாட்டேன். அதன் பின், எனக்கு விருப்பம் இருந்தால் செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us