ADDED : பிப் 25, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
மைசூரு: தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முதல்வர் சித்தராமையா இன்று மைசூரு வருகிறார்.
பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்துக்கு இன்று மாலை 5:00 மணி முதல்வர் சித்தராமையா செல்கிறார். அங்கு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், இரவு 9:00 மணிக்கு, அதே சிறப்பு விமானம் மூலம் மீண்டும் பெங்களூரு திரும்புகிறார்.
மைசூருக்கு மதியம் அல்லது மாலை நேரத்தில் வந்தால், நகரில் உள்ள தனது வீட்டில் தங்கி, மறுநாள் பெங்களூரு புறப்படுவார். இம்முறை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதால், இன்று இரவே பெங்களூரு திரும்புவதாக கூறப்படுகிறது.
