sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கூடுதல் அட்வகேட் ஜெனரல்களுக்கு முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை

/

கூடுதல் அட்வகேட் ஜெனரல்களுக்கு முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை

கூடுதல் அட்வகேட் ஜெனரல்களுக்கு முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை

கூடுதல் அட்வகேட் ஜெனரல்களுக்கு முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை


ADDED : ஜூன் 27, 2025 06:58 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: “பணியை திறம்பட செய்யாவிட்டால், உங்களை மாற்ற வேண்டி இருக்கும்,” என, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களுக்கு, முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை விடுத்தார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல்களுடன், முதல்வர் சித்தராமையா விதான் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

நீதிமன்றங்களில் அரசு சார்பில் ஆஜராக போதுமான, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில சட்டங்களை முழுமை செயல்படுத்துவது, உங்கள் கையில் உள்ளது.

நீங்கள் அனைவரும் மூத்த வக்கீல்கள். அரசின் முன்னுரிமையை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், எந்த காரணத்திற்கும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.

நீதிமன்றங்களில் திறம்பட வாதங்களை முன்வைக்காததால், பல வழக்குகளில் நாம் பின்னடைவுகளை சந்தித்து வருகிறோம். அரசுக்கு சாதகமாக உள்ள வழக்குகளில் கூட, நமக்கு சாதகமாக உத்தரவு வராதது ஏன்? பல வழக்குகளில் அரசுக்கு எதிராக, தடை உத்தரவு பெறுவது எப்படி எளிதாகிறது?

அரசுக்கு எதிரான தடை உத்தவு வழக்குகளை, விரைந்து முடிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில சிறிய வழக்குகளில் கூட, அரசை சங்கடப்படுத்தும் நிகழ்வுகள் நடந்துள்ளன.

உங்கள் தவறுகள் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும், சூழ்நிலையை ஏற்படுத்த கூடாது. உங்கள் வேலையை திறம்பட செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்களை மாற்ற வேண்டி இருக்கும்.

நீங்கள் ஒவ்வொரு வழக்குகளையும், சவாலாக எடுத்துக் கொண்டால், அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

உங்களிடம் இருந்து சுறுசுறுப்பான பணியை அரசு எதிர்பார்க்கிறது. துறைகள் அல்லது அதிகாரிகளிடம் இருந்து, உங்களுக்கு சரியான தகவல் கிடைக்கா விட்டால், தலைமை செயலர் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வாருங்கள்.

அரசின் 21,799 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவற்றில் 5,016 வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆலோசனையில் தலைமை செயலர் ஷாலினி, சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல், அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, முதல்வரின் சட்ட ஆலோசகர் பொன்னண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us