/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லோக்சபா தேர்தல் முறைகேடுகள் விசாரணை நடத்த முதல்வர் உறுதி
/
லோக்சபா தேர்தல் முறைகேடுகள் விசாரணை நடத்த முதல்வர் உறுதி
லோக்சபா தேர்தல் முறைகேடுகள் விசாரணை நடத்த முதல்வர் உறுதி
லோக்சபா தேர்தல் முறைகேடுகள் விசாரணை நடத்த முதல்வர் உறுதி
ADDED : ஆக 10, 2025 08:44 AM

மைசூரு : ''லோக்சபா தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்,'' என, முதல்வர் கூறி உள்ளார்.
முதல்வர் சித்தராமையா நேற்று மைசூரில் பல மேம்பாட்டுத் திட்டங்களை துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் ஓட்டு மோசடி நடந்துள்ளது. இது குறித்து, அட்வகேட் ஜெனரல் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும்.
ஓட்டு மோசடி குறித்து ராகுல் பேசியது உண்மை. ஆவணங்களுடன் அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த ஆவணங்கள் அனைத்தும் மத்திய, மாநில தேர்தல் ஆணையங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய அறையில் 80 பேர் வசிக்க முடியுமா என்பதை சிந்தித்து பாருங்கள்.
தேர்தல்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் என அனைத்திலும் மோசடி நடப்பது குறித்து, காங்கிரஸ் துவக்கத்தில் இருந்தே குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெறும் என, கள ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால், 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். பா.ஜ., தவறு செய்துள்ளது; பொய்களை பரப்புகிறது.
வருணா தொகுதி இடைத்தேர்தலில் இறந்தவர்கள் அனைவரும் எனக்கு ஓட்டளித்து, வெற்றி பெற்றதாக நான் கூறவில்லை. இறந்தவர்கள் ஓட்டுப் போட்டிருந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.