sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மக்காச்சோளம் கொள்முதல் குறித்து முதல்வர் ஆலோசனை

 மக்காச்சோளம் கொள்முதல் குறித்து முதல்வர் ஆலோசனை

 மக்காச்சோளம் கொள்முதல் குறித்து முதல்வர் ஆலோசனை


ADDED : நவ 29, 2025 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மக்காச்சோளம் கொள்முதல், எத்தனால் உற்பத்தி குறித்து, முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு விதான்சவுதாவின் மாநாடு ஹாலில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், வேளாண் துறை அமைச்சர் செலுவராயசாமி, கலால்துறை அமைச்சர் திம்மாபூர், அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ் பங்கேற்றனர்.

பின், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:

மாநிலத்தில் இம்முறை விவசாயிகள், பெருமளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். 54.74 லட்சம் டன் மக்காச்சோளம் அறுவடை செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம். மற்ற மாநிலங்களிலும் இது போன்று, விளைச்சல் அதிகரிக்கக்கூடும். விளைச்சல் அதிகரிப்பதால், சந்தையில் மக்காச்சோளம் விலை குறைந்துள்ளது.

எனவே விவசாயிகளின் உதவிக்கு செல்லும் நோக்கில், அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்துகிறது. நேற்று எத்தனால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மத்திய அரசு, மக்காச்சோளம் மூலமாக 26.3 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய, மாநிலத்துக்கு ஒதுக்கீடு நிர்ணயித்துள்ளது. இந்த அளவுக்கு எத்தனால் உற்பத்தி செய்ய, 7 லட்சம் டன் மக்காச்சோளம் போதும். வெவ்வேறு மாதங்களில் எத்தனால் உற்பத்தி செய்யும்படி, மத்திய அரசு அட்டவணை நிர்ணயித்துள்ளது.

எத்தனால் உற்பத்தி நிறுவனங்கள், மாநிலத்தின் மக்காச்சோளத்தை பயன்படுத்தி, குறைந்தபட்சம் 100 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய, அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தும், 26 கோடி லிட்டருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.

இதன் விளைவாக விவசாயிகளிடம் அதிகமான மக்காச்சோளம் கொள்முதல் செய்வதில், சிக்கல் ஏற்படுகிறது.

எத்தனால் உற்பத்தி செலவு, எத்தனால் விலையை விட அதிகம். ஆனால் ஆதார விலையில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு நிர்ணயித்த விலையில், மக்காச்சோளம் வாங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எத்தனால் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. அரசின் உத்தரவுகளை பின்பற்றுவதாக கூறியுள்ளன.

கே.எம்.எப்.,பும் கூட தனக்கு தேவையான மக்காச்சோளத்தை ஆதார விலையில் வாங்குவதாக ஒப்புக்கொண்டது. வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைநன்று, கோழிப்பண்ணை உரிமையாளர்கள், கால்நடை தீவன உற்பத்தி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us