தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிலிண்டர் பதுக்கலை தடுக்க தலைமை செயலர் உத்தரவு

 சிலிண்டர் பதுக்கலை தடுக்க தலைமை செயலர் உத்தரவு

 சிலிண்டர் பதுக்கலை தடுக்க தலைமை செயலர் உத்தரவு


ADDED : மார் 12, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கள்ளச்சந்தையில் எல்.பி,ஜி., காஸ் விற்கப்படாமல், பதுக்கி வைக்காமல் தடுக்க, போலீஸ் துறை, போக்குவரத்து மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ் உத்தரவிட்டுள்ளார்.

காஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்துடன், பெங்களூரின் விதான் சவுதாவில், தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ், நேற்று ஆலோசனை நடத்தினார். இதில உணவுத்துறை, போலீஸ் துறை உயர் அதிகாரிகள், நகர போலீஸ் கமிஷனர், காஸ் விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில், அவர் பேசியதாவது:

தற்போது ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக, ஹோட்டல் உரிமையாளர்கள், கூடுதல் சிலிண்டர்களை வாங்கி, சேகரித்து வைக்க கூடாது. கள்ளச்சந்தையில் எல்.பி,ஜி., காஸ் விற்கப்படாமல், பதுக்கி வைக்காமல் தடுக்க, போலீஸ் துறை, போக்குவரத்து மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனைகள், பி.ஜி.,க்களுக்கு காஸ் பற்றாக்குறை ஏற்படாமல், நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர் பதுக்கப்படாமல், மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அடுத்த 25 நாட்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. இது தொடர்பாக, உணவுத்துறை மூலமாக ஹெல்ப் லைன் துவங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.சி.ராவ் அளித்த பேட்டி:

வர்த்தக காஸ் சப்ளை முழுதாக நின்றுள்ளது. அனைத்து மாநிலங்களிலும், இதே நிலை தான். தலைமை செயலர், நல்ல ஆலோசனைகளை கூறியுள்ளார்.

மாநிலத்துக்கு சப்ளையாகும் வர்த்தக எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர்களில், 50 சதவீதத்தை ஹோட்டல்களுக்கு வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளோம். புள்ளி - விபரங்களுடன் கடிதம் அளிக்கும்படி கூறியுள்ளார். மத்திய அரசுக்கும் நாங்கள் கடிதம் எழுதுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us