தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செலுவாம்பா மருத்துவமனையில் எறும்பு கடித்து குழந்தை இறப்பு?

 செலுவாம்பா மருத்துவமனையில் எறும்பு கடித்து குழந்தை இறப்பு?

 செலுவாம்பா மருத்துவமனையில் எறும்பு கடித்து குழந்தை இறப்பு?


ADDED : ஏப் 24, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெற்று வந்த, பச்சிளம் ஆண் குழந்தை எறும்பு கடித்து இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மைசூரின் செலுவாம்பா மருத்துவமனையில், ஏப்ரல், 15ம் தேதி, இளம் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏழு மாத குறை பிரசவத்தில் பிறந்ததால், குழந்தை வெறும் 1.40 கிலோ இருந்தது. இதனால், ஐ.சி.யு.,வில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எறும்புகள் கடித்ததில் நேற்று காலை குழந்தை இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐ.சி.யு.,வில் எறும்புகள் அதிகம் இருப்பதாக, குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளனர். ஆனாலும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இனிப்பு இருந்ததால் எறும்புகள் வந்திருக்கும் என்றனர்.

இப்போது எறும்புகள் கடித்து குழந்தை இறந்துள்ளது என, பெற்றோர் கூறுகின்றனர். தங்களுக்கு நியாயம் வேண்டும் என, வலியுறுத்தி மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர்.

அவர்களின் குற்றச்சாட்டை, மருத்துவமனை அதிகாரி லட்சுமிகாந்த் மறுத்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளது. எடை குறைவாக இருந்ததால், ஐ.சி.யு.,வில் சிகிச்சை அளித்து வந்தோம். சிகிச்சையில் இருந்ததால் குழந்தையின் கையில், வாயில் பிளாஸ்டர் ஒட்டியிருந்தோம். பிளாஸ்டரை அகற்றும் போது கரைகள் ஏற்பட்டுள்ளன. இதை வைத்து குழந்தை எறும்பு கடித்து இறந்ததாக, பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஐ.சி.யு.,வில் குளுக்கோஸ் இருப்பதால், ஒன்றிரண்டு எறும்புகள் இருந்திருக்கலாம். குழந்தையை காப்பாற்ற நாங்கள் முயற்சித்தோம். எங்கள் ஊழியர்கள் அலட்சியம் காட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us