/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வனப்பகுதியில் குழந்தை: பெற்றோர் கண்டுபிடிப்பு
/
வனப்பகுதியில் குழந்தை: பெற்றோர் கண்டுபிடிப்பு
ADDED : ஏப் 04, 2025 06:45 AM
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், பெலாளு கிராமத்தின் கொடோளுகெரே - முன்ட்ரோட்டு சாலையில், வனப்பகுதியில் சமீபத்தில், ஒன்றரை மாத பெண் குழந்தையை பெண்ணொருவர் கண்டெடுத்தார்.
தர்மஸ்தலா போலீசார், குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல கோணங்களில் விசாரித்து பெற்றோரை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
பெலாளு கிராமத்தின் ரஞ்சித் கவுடா, 27, மங்களூரில் பணியாற்றும் கோலங்காஜி கிராமத்தை சேர்ந்த சுஷ்மிதா கவுடா, 22 காதலித்து வந்தனர். இவர்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டதில், சுஷ்மிதா கர்ப்பமானார். இவ்விஷயம் குடும்பத்தினருக்கு தெரியாது.
இவரை உஜிரேவில் வாடகை வீட்டில் தங்க வைத்த ரஞ்சித் கவுடா, வாரம் ஒரு முறை வந்து பார்த்து உள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன், சுஷ்மிதாவுக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்தது. இது குடும்பத்தினருக்கு தெரிந்தால், பிரச்னை ஏற்படும் என்ற பீதியில், குழந்தையை வனப்பகுதியில் விட்டு சென்றதாக போலீசாரிடம் ஒப்பு கொண்டனர்.
போலீசார், இருவரின் குடும்பத்தினரையும் அழைத்து பேசி, காதலர்களுக்கு திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தனர். குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர்.