தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குழந்தை கடத்தல்காரர்கள் பெலகாவியில் பொதுமக்கள் கிலி

 குழந்தை கடத்தல்காரர்கள் பெலகாவியில் பொதுமக்கள் கிலி

 குழந்தை கடத்தல்காரர்கள் பெலகாவியில் பொதுமக்கள் கிலி


ADDED : மார் 02, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: பெலகாவி நகரில் குழந்தை கடத்தல்காரர்கள் புகுந்துள்ளதாக, வதந்தி பரவியதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். குழந்தைகளை வெளியே விட தயங்குகின்றனர்.

பெலகாவி நகரில் குழந்தை கடத்தல்காரர்கள் புகுந்துள்ளனர். சாலைகளில் விளையாடும் குழந்தைகளை கடத்தி செல்கின்றனர். பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, தகவல் பரவியது. இதை போலீசார் மறுத்துள்ளனர்.

இது குறித்து பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் பூஷண் போரசே அளித்த பேட்டி:

பெலகாவி நகரின் காந்தி நகரில் குழந்தைகளை கடத்த வெளி மாநிலத்தின் ஒரு பெண் வந்துள்ளதாக, அப்பகுதியினர் நேற்று (நேற்று முன் தினம்), எங்களுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று, அப்பெண்ணை விசாரித்த போது, அவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல. பெலகாவியில் வசிப்பவர்தான்; பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துவது, விசாரணையில் தெரிந்தது.

அவர் குற்றப்பின்னணி உள்ளவர் அல்ல. இரண்டு வாரங்களாக வாட்ஸாப்பில், ஒரு ஆடியோ க்ளிப் பரவி வருகிறது. அதில் ஒரு பெண், 'என் மகளுடன் கடைக்கு சென்ற போது, என் மகளை முயற்சி நடந்தது' என, கூறியிருந்தார்.

ஆனால் பெலகாவியில் இரண்டு மாதங்களாக, குழந்தை கடத்தல் ஏதும் நடக்கவில்லை. வழக்கும் பதிவாகவில்லை.

அந்த பெண் பேசி ஆடியோ க்ளிப், ஒருவரிடம் இருந்து மற்ற வருக்கு ஷேர் செய்ததால், இத்தகவல் பரவியுள்ளது. பெலகாவியில் குழந்தை திருடர்கள் நுழை யவில்லை.

பொது மக்கள் பயப்பட தேவையில்லை. வீட்டருகில், சாலையில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாடினால், தாமதிக்காமல் 112ல் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த ஏழு நிமிடத்தில், போலீசார் அங்கிருப்பர். அந்நபர்களை விசாரிப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us