sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போதை பொருட்களை கட்டுப்படுத்த குழந்தைகள் ஆணையம் கோரிக்கை

 போதை பொருட்களை கட்டுப்படுத்த குழந்தைகள் ஆணையம் கோரிக்கை

 போதை பொருட்களை கட்டுப்படுத்த குழந்தைகள் ஆணையம் கோரிக்கை


ADDED : மார் 09, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரின் பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதால், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

பெங்களூரில் இளைஞர்கள் மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரி மாணவர்களும் போதைப் பொருட்கள் பயன்படுத்துகின்றனர். இதை கட்டுப்படுத்த போலீசார், கடுமையான நடவடிக்கை எடுத்தும், பலன் அளிக்கவில்லை.

அவ்வப்போது கல்வி நிறுவனங்களுக்கு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால், ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, வீடியோக்கள் மூலமாக விவரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

சில நாட்களுக்கு முன், பெங்களூரின் பல இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், மாணவர் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். மாணவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. மாணவர்களை அதிலிருந்து மீட்க, போலீசார் கவுன்சலிங் கொடுக்கின்றனர்.

மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை கண்டு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கவலை அடைந்துள்ளது. போதைப்பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும் என, போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, பெங்களூரு நகர் போலீஸ் கமிஷனருக்கு, குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் சசிதர் கோசும்பே எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

பெங்களூரு நகரின், பல்வேறு பள்ளி, கல்லுாரிகள் மற்றும் ஹாஸ்டல்களில் போதைப் பொருட்களுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும்.

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், ஹாஸ்டல்களில் உள்ள மாணவர்கள் பலர், போதை பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

போலீஸ் துறை, மாணவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பள்ளி, கல்லுாரிகள், மாணவர் விடுதிகளில் கட்டம். கட்டமாக சோதனை நடத்த வேண்டும். இவற்றின் சுற்றுப்பகுதிகளில் போதைப் பொருட்கள் நுழைவதை, கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us