ADDED : ஏப் 09, 2026 02:13 AM
அ நிறம் | அளவு
முல்பாகல்: முல்பாகலின் தர்மஸ்தலா ஊரக வளர்ச்சி சங்க அலுவலகத்தில் அதிகாரியின் முகத்தில் மிளகாய் பொடி துாவி, ஐந்து லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
முல்பாகலின் ஷமீர் மொஹல்லாவில் உள்ள தர்மஸ்தலா ஊரக வளர்ச்சி சங்கத்தில், வாராந்திர தவணைகளில் வழங்கிய கடன் தொகை பணத்தை, வசூலித்து அதனை தலைமை அலுவலகத்திற்கு செலுத்துவதற்கு அதிகாரி சசிகலா தயாராக வைத்திருந்தார்.
தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்ல இருந்தபோது, நேற்று அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், அலுவலகத்திற்குள் புகுந்தனர். சசிகலாவின் கண்களில் மிளகாய் பொடியை துாவினர். ஐந்து லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு தலைமறைவாகினர்.
முல்பாகல் நகர போலீசில் புகார் செய்தனர். கோலார் எஸ்.பி., கன்னிகா சிக்ரிவால், டி.எஸ்.பி., மணிஷா மனோஜ், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
