sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சினி கடலை

/

சினி கடலை

சினி கடலை

சினி கடலை


ADDED : ஏப் 11, 2025 07:01 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சஹனாவுக்கு திருப்புமுனை?

பரத் வர்ஷா இயக்கிய, இன்டர்வெல் திரைப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் பெரும்பாலும் புதிய முகங்களுக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''பலரும் பல கனவுகளுடன், திரையுலகிற்கு வருகின்றனர். கனவை நனவாக்குவது எளிதான விஷயமல்ல. இதை நான் அனுபவித்து உணர்ந்தவன். எனவே என் படத்தில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்தேன். சஹனா நாயகியாக நடித்துள்ளார்.

''இவர் சின்னத்திரை தொடர்களில், சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர். கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் நடுத்தர வர்க்கத்து இளைஞனின் கதையாகும். இந்த திரைப்படம் தன் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் என, சஹனா நம்புகிறார்,'' என்றார்.

13 நாளில் நடக்கும் கதை!

நடிகை ஹர்ஷிகா பூனச்சா இயக்கும் முதல் திரைப்படத்தில் நடிக்கும் கிஷோர், தற்போது மற்றொரு பெண் இயக்குனர் சிந்து சீனிவாஸ் இயக்கும் படத்திலும் வாய்ப்பு பெற்றுள்ளார். இது குறித்து கிஷோர் கூறுகையில், ''சிந்து சீனிவாஸ், வெயிட்டான கதையை வைத்து திரைப்படம் இயக்குகிறார். 13 நாட்களில் நடக்கும் கதையாகும். ஹர்ஷிகா பூனச்சா இயக்கும், சி.சவுஜன்யா திரைப்படமும் அர்த்தமுள்ள கதை கொண்டது. பெயர் மற்றும் கதை இரண்டுமே வித்தியாசமானது. இயக்குனர் சிந்துவின் கோணமும் மாறுபட்டதாக உள்ளது. மே மாதம் படப்பிடிப்பை துவக்குவோம்,'' என்றார்.

சமுதாய அவலங்கள் தோலுரிப்பு!

பெரும் எதிர்பார்ப்பை துாண்டிய, கபட நாடக சூத்திரதாரி படத்தின் முதல் போஸ்டர், சமீபத்தில் வெளியானது. நடிகர் தனஞ்செய், போஸ்டரை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தின் கதை குறித்து, தீரஜ் கூறுகையில், ''சமுதாயத்தின் பல அவலங்களை, படத்தின் வாயிலாக தோலுரித்து காட்டியுள்ளோம். இன்றைய அரசியல் குறித்தும் உள்ளது.

''வட மாவட்டத்தின் உள்ள, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்றில், படப்பிடிப்பு நடந்துள்ளது. கோவில் பெயரை ரகசியமாக வைத்துள்ளோம். அதற்கு முக்கியமான காரணம் உள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக் ஷன் பணி நடக்கிறது. விரைவில் திரைக்கு கொண்டு வருவோம், என்றார்.

திருடனுக்கு வரும் காதல்!

இயக்குனர் சாயி பிரதீப் திரைக்கதை எழுநி, இயக்கிய கதீமா திரைப்படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் டிரெய்லர் வெளியானது. இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'படத்தில் சந்தன் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அனுஷா கிருஷ்ணா நடித்துள்ளார். மூத்த கலைஞர்கள் கிரிஜா லோகேஷ், 'முக்கிய மந்திரி' சந்துரு, ஷோபராஜ் உட்பட, பலர் நடித்துள்ளனர்.

'திருட்டில் ஈடுபடும் நாயகன் காதல் வயப்படுகிறார். அதன்பின் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், இதனால் பலருக்கு ஏற்படும் நன்மைகளே, கதையின் சாராம்சம். பெங்களூரின் சிட்டி மார்க்கெட்டில் படப்பிடிப்பு நடந்துள்ளது' என்றனர்.

முதுகுவலியால் தர்ஷன் ஓய்வு!

தர்ஷன் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும், டெவில் திரைப்பட படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. கடந்தாண்டு ரேணுகா சாமி கொலை வழக்கில், தர்ஷன் சிறைக்கு சென்றதால், படப்பிடிப்பு தாமதமானது. அதன்பின் ஜாமினில் வெளியே வந்து படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

இது பற்றி படக்குழுவினர் கூறுகையில், 'ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்தினோம். தொடர்ந்து 28 மணி நேரம், ஓய்வின்றி படப்பிடிப்பில் பங்கேற்றதால், தர்ஷனுக்கு முதுகு வலி ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே முதுகு வலி இருந்தது. தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றதால், மீண்டும் வலி அதிகரித்துள்ளது. ஓய்வில் இருக்கிறார். நடப்பாண்டு இறுதியில் படம் திரைக்கு வரும், என்றனர்.

தாயிடம் மன்னிப்பு கேட்பு!

நடிகர் அஜித் ஜெயராஜ். நிவிஷ்கா பாட்டீல் நாயகன், நாயகியாக நடிக்கும், ஜான்டி சன் ஆப் ஜெயராஜ் படத்தின் முதல் பாடல், சமீபத்தில் வெளியானது. இதை எழுதியவர் இயக்குனர் ஆனந்த ராஜ்.

கதை குறித்து, அவரிடம் கேட்ட போது, ''நாம் எந்த தவறு செய்தாலும், உடனடியாக மன்னிப்பு கேட்போம். ஆனால் தாயிடம் மன்னிப்பு கேட்கமாட்டோம். இந்த படத்தின் மூலம் அனைத்து தாய்களிடமும் மன்னிப்பு கேட்கிறோம். தற்போது வெளியான முதல் பாடல், படத்தின் கடைசியில் வருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us