/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சின்னையா சிறையில் அடைப்பு: மண்டை ஓட்டின் ரகசியம் அம்பலம்
/
சின்னையா சிறையில் அடைப்பு: மண்டை ஓட்டின் ரகசியம் அம்பலம்
சின்னையா சிறையில் அடைப்பு: மண்டை ஓட்டின் ரகசியம் அம்பலம்
சின்னையா சிறையில் அடைப்பு: மண்டை ஓட்டின் ரகசியம் அம்பலம்
ADDED : செப் 07, 2025 02:29 AM

பெங்களூரு: தர்மஸ்தலா பொய் புகார் அளித்து கைதான சின்னையா நேற்று ஷிவமொக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் அளித்த மண்டை ஓடு, முன்பு கொலை செய்யப்பட்ட கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா என்பது தெரிய வந்துள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கணக்கான பெண்கள் உடல்களை புதைத்ததாக, பொய் புகார் அளித்த சின்னையா என்பவரை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு கடந்த மாதம் 22ம் தேதி கைது செய்தது. அவரிடம் 16 நாட்கள் காவல் எடுத்து எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேற்றுடன் அவரது காவல் முடிந்த நிலையில், பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க, எஸ்.ஐ.டி., தரப்பு அனுமதி கோரவில்லை. இதனால் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி, நீதிபதி விஜயேந்திரா உத்தரவிட்டார்.
ஜாமின் மனு பாதுகாப்பு காரணங்களுக்காக, ஷிவமொக்கா மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். சின்னையாவுக்கு ஜாமின் கேட்டு, தட்சிண கன்னடா மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், பெல்தங்கடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது 9ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
தர்மஸ்தலாவுக்கு எதிராக அவதுாறு பரப்ப, சின்னையாவை பின்னால் இருந்து இயங்கியது, ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் என்பதும் தெரிந்தது. இவர்களை தவிர 'யு - டியூபர்'கள் சமீர், அபிஷேக், கேரளாவின் முனாப் ஆகியோரும் தர்மஸ்தலா குறித்து அவதுாறு பரப்பியதால், அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் எஸ்.ஐ.டி., கொண்டு வந்தது.
சவுஜன்யா மாமா கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த் ஆகியோரிடம் நேற்று இரண்டாவது நாளாக, பெல்தங்கடியில் உள்ள எஸ்.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது சின்னையா, முதன்முதலில் பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி, பெண்கள் உடல்களை புதைத்ததாக ரகசிய வாக்குமூலம் அளித்தபோது, நீதிமன்றத்தில் ஒரு மண்டை ஓடு, 12 எலும்புகளை கொடுத்தார். அந்த மண்டை ஓடு, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் அது ஆண் மண்டை ஓடு என்பது தெரிந்தது.
இந்த மண்டை ஓட்டை சின்னையா எங்கிருந்து கொண்டு வந்தார் என்பது புதிராக இருந்தது. அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அந்த மண்டை ஓட்டை கொடுத்தவர், தர்மஸ்தலா உஜ்ரே கிராமத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா என்பது தெரிந்தது. இவரும், சின்னையாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.
ராஜ்யசபா சின்னையா, தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில், துாய்மை பணியாளராக வேலை செய்தபோது, நேத்ராவதி ஆற்றில் குளிக்க வரும் பக்தர்கள் தவறுதலாக விட்டுச் செல்லும் நகைகளை எடுத்துச் சென்று விட்டல் கவுடாவிடம் கொடுப்பது வழக்கம். அந்த நகைகளை விற்று கிடைக்கும் பணத்தில், இருவரும் ஆடம்பர செலவு செய்து உள்ளனர்.
தர்மஸ்தலா கோவில் பெயர், வீரேந்திர ஹெக்டே குடும்பத்தின் பெயரை கெடுக்க, சின்னையாவை, மகேஷ் திம்மரோடிக்கு, விட்டல் கவுடா அறிமுகப்படுத்தியதும்; அனைவரும் சேர்ந்து சதி தீட்டியதும் தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி விட்டல் கவுடாவுக்கு, எஸ்.ஐ.டி., 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
எஸ்.ஐ.டி., விசாரணையில், மண்டை ஓட்டை டில்லிக்கு எடுத்துச் சென்று, கேரள அரசியல்வாதி ஒருவரிடம் காட்டியதாகவும் அந்த எம்.பி.,யின் பெயர் தனக்கு தெரியாது என்றும் சின்னையா கூறியிருந்தார். நேற்று விசாரணைக்கு ஆஜரான ஜெயந்த்திடம் விசாரித்தபோது, அந்த கேரள அரசியல்வாதி, கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சந்தோஷ்குமார் என்பது தெரிந்தது.
'தர்மஸ்தலா சதி வழக்கில் கர்நாடக அரசு, போலீசாரிடம் இருந்து தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கருதியதால், மண்டை ஓட்டை எம்.பி., சந்தோஷ்குமாரிடம் காட்டினோம். தர்மஸ்தலா விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில் குரல் எழுப்புவதாக அவர் கூறினார்' என, எஸ்.ஐ.டி.,யிடம் ஜெயந்த் கூறி உள்ளார்.