தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 40 இடங்களில் மண் சேகரித்து பரிசோதித்த பின் உருவாக்கப்பட்ட சின்னசாமி ஆடுகளம் மைதானம் 

 40 இடங்களில் மண் சேகரித்து பரிசோதித்த பின் உருவாக்கப்பட்ட சின்னசாமி ஆடுகளம் மைதானம் 

 40 இடங்களில் மண் சேகரித்து பரிசோதித்த பின் உருவாக்கப்பட்ட சின்னசாமி ஆடுகளம் மைதானம் 


ADDED : ஏப் 03, 2026 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 03:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.பி.எல்., என்ற இந்தியன் பீரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், நாட்டின் பல நகரங்களில் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு, ஆர்.சி.பி., என்ற, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை கொண்டாட, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் இறந்தனர். இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் உள்ளூர், சர்வதேச போட்டிகள் நடத்த அரசு தடை விதித்தது. கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தினர் நடத்திய பேச்சு மூலம், மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்த அரசு சம்மதம் தெரிவித்தது.

கடந்த மாதம், 28ம் தேதி துவங்கிய முதல் போட்டியில், பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதின. இதில், 202 ரன்கள் இலக்கை எட்டி பிடித்து, பெங்களூரு அணி வெற்றி பெற்றது. சின்னசாமி மைதானத்தில் மீண்டும் போட்டிகள் துவங்கி இருப்பதால், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

100 ஆண்டு மைதானம் குறித்து முன்னாள் பராமரிப்பாளர் நாராயண ராஜு கூறியதாவது:

இந்த ஆண்டு, ஐ.பி.எல்., துவக்க போட்டி நடந்த சின்னசாமி மைதானம், பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கியது. மொத்தம், 404 ரன்களும், 13 விக்கெட்டுகளும் எடுக்கப்பட்டன.

இந்த மைதானத்தை நன்றாக பராமரித்தால், 100 ஆண்டுகள் நீடிக்கும்.

கடந்த, 2001ல் சின்னசாமி மைதான பராமரிப்பாளராக நான் நியமிக்கப்பட்ட போது, நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ற ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

ஆடுகளத்திற்காக மண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். அந்த நேரத்தில், கர்நாடகா மாநில கிரிக்கெட் அணி சிங்கப்பூருக்கு கிரிக்கெட் விளையாட சென்றது.

அங்குள்ள மைதானத்தில் பந்துகள் தாறுமாறாக எகிறி சென்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை பயன்படுத்தியது தெரியவந்தது.

நடுவர் பாராட்டு நானும் நாடு முழுதும் பயணம் செய்து, 40 இடங்களில் மண்ணை சேகரித்து கொண்டு வந்தேன். ராய்ச்சூரின் சாவந்தகேரியில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் நன்றாக இருந்தது.

அந்த மண்ணை பயன்படுத்தி, சின்னசாமி மைதானத்தில் பயிற்சி ஆடுகளம் அமைத்தோம். பயிற்சிக்கு ஏற்றவாறு வடிவமைத்தோம்.

பிரதான ஆடுகளத்திற்காக, இன்னும் தரம் உயர்ந்த மண்ணை தேடிய போது, மாண்டியா அருகே ஹோலாலு என்ற கிராமத்தில் இருந்து கிடைத்தது.

அந்த மண் மூலம் அமைக்கப்பட்ட ஆடுகளம், 2011 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பயன்படுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள், ஆடுகளம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டினர். நடுவராக இருந்த ரோஷன் மகநாமா, ஆடுகளத்தை பாராட்டி எனக்கு கடிதம் எழுதினார்.

இதனை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. தற்போது சின்னசாமி மைதானத்தின் புகழ் வளர்ந்து உள்ளது. சிறந்த ஆடுகளத்தை அறிமுகப்படுத்தியதால் திருப்தி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us