தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ சுற்றுலா பயணியரை கவரும் சிந்தேரி பாறை

 சுற்றுலா பயணியரை கவரும் சிந்தேரி பாறை

 சுற்றுலா பயணியரை கவரும் சிந்தேரி பாறை


ADDED : மே 06, 2026 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 11:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா என்றாலே கடற்கரை கள் அதிகம் இருக்கும் பகுதி என்று தான் முதலில் நினைக்க தோன்றும். ஆனால் இந்த மாவட்டத்திலும் டிரெக்கிங் செல்ல ஏராளமான இடங்கள் உள்ளன . கு றிப்பாக உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள யானா பாறைகள் பக்தர்களை வெகுவாக கவருகிறது. தண்டேலியில் காளி ஆ ற்றில் ந டக்கும் படகு சவாரியையும், சுற்றுலா பயணிய ர் அதிகம் விரும்புகின்றனர்.

300 அடி உயரம் தண்டேலி வனப்பகுதிக்குள் குந்த் என்ற இடத்தில், சுற்றுலா பயணியரை வெகுவாக கவரும் சிந்தேரி பாறை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் ஒற்றைக்கல் கிரானைட் பாறை அமைப்பாக உள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாறை இது என்றும்; 20ம் நுாற்றாண்டில் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக நம்பப்படும் ஆங்கிலேய பெண் சிந்தேரா பெயரால், இந்த இடம் சிந்தேரி என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

200 படிகள் பாறையை ஒட்டி கனேரி ஆறு ஓடுகிறது. இந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு செல்ல முன் அனுமதி பெறுவது அவசியம். வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஜீப் அல்லது வனப்பகுதி வழியாக நடந்து பாறை உள்ள இடத்தை அடையலாம். பின், 200 படிக்கட்டுகள் கீழ் நோக்கி இறங்கி சென்றால் ஒரு கரையில் இருந்து மறுபக்கம் ஓங்கி உயர்ந்து நிற்கும் பாறை, அதன் கீழ் ஓடும் ஆற்றின் அழகை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினர், நண்பர்களோடு இங்கு செல்வோருக்கு புதிய அனுபவம் கிடைக்கும்.

மழை பெய்யும் நேரத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, வனப்பகுதி வழியாக சென்று, சிந்தேரி பாறையை காணலாம்.

எப்படி செல்வது?

 பெங்களூரில் இருந்து தண்டேலி 460 கி.மீ., துாரத்தில் உள்ளது.

 மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தண்டேலிக்கு நேரடி அரசு பஸ் உள்ளது.

 ரயிலில் சென்றால் அல்னாவர், லோண்டா, தார்வாட், ஹூப்பள்ளி ஆகிய ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து வாடகை கார், பஸ்கள் மூலம் தண்டேலி செல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us