ADDED : மார் 09, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயல் தமிழ்ச் சங்கம் சார்பில், சித்திரை இலக்கிய விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் வரும் 11 ம் தேதி மாலை 4:00 மணிக்கு சங்கத் தலைவர் சு.கலையரசன் தலைமையில் தங்கவயல் தமிழ்ச் சங்க அலுவலகத்தில் நடக்கிறது.
தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரபுராம், செயல் தலைவர் கமல் முனிசாமி, துணைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் கூறுகையில், 'தங்கவயல் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் ஆர்வலர்கள் 300 பேருக்கு இதுவரை 'தமிழ் மாமணி' விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
'தமிழ் பிரமுகர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக, வரும் ஏப்ரலில் சித்திரை இலக்கிய விழா நடக்க உள்ளது. விழாவில் கட்சி, மதம், ஜாதி சார்பற்ற தமிழ், தமிழர் நலம் விரும்பும் தமிழார்வலர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்' என்றனர்.
