/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சோழர் காலத்திய வீரபத்ர சுவாமி கோவில்
/
சோழர் காலத்திய வீரபத்ர சுவாமி கோவில்
ADDED : மே 06, 2025 05:37 AM

பெங்களூரு எலஹங்காவின் திண்டுலு கிராமத்தில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு, சோழர் காலத்தில் கட்டப்பட்ட வீரபத்ர சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கோபுரத்தில் சிவனின் வாகனமான நந்தி அருள்பாலிக்கிறார். பல்வேறு பறவைகளின் ரீங்காரங்களுக்கு நடுவே இக்கோவில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள கிராமத்தினர் ஒன்றாக சேர்ந்து, பார்வதி தேவி, காசி விஸ்வநாதேஸ்வரா, மஹாகணபதி, நவக்கிரஹங்கள் பிரதிஷ்டை செய்தனர்.
ஆண்டுதோறும் சிவராத்திரிக்கு பின் சோமவாரம், மங்களவார பூஜைகள் நடக்கின்றன. தீ மிதி திருவிழாவும் பிரசித்தி பெற்றது.
கார்த்திகை மாதத்தில் தீப உத்சவம் நடத்தப்படுகிறது. தசரா, நவராத்திரியின்போது கிராமத்தில் நகர்வலம் நடக்கிறது.
டி.எஸ்.முத்தராஜு குடும்பத்தினர், நான்கு தலைமுறையாக சுவாமிக்கு பூஜைகள் செய்து வருகின்றனர்.
வீரபத்ர சுவாமிக்கும் தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, காசி விஸ்வேஸ்வர சுவாமி, பார்வதி தேவிக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
மஹாகணபதி விக்ரஹமம், ஸ்ரீ சண்டிகேஸ்வர சுவாமி, பக்த ஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீமன் நாராயணசாமி, ஸ்ரீ காலபைரவேஸ்வர சுவாமி, நாகதேவதைகள் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இரண்டு வில்வ மரங்கள் உள்ளன. ஒன்று சிவன் ரூபமாகவும், மற்றொன்று பார்வதி ரூபமாகவும் பாவித்து பூஜை செய்யப்படுகிறது. சிவனின் மரத்தில் முள் இருக்காது; பார்வதி மரத்தில் முள் இருக்கும். இவ்விரு மரங்களுக்கும் திருமணமும் செய்யப்பட்டு உள்ளது.
கோவில் வளாகத்தில், 80 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது.
இங்கு சுவாமி தரிசனம் செய்வதன் மூலம், வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதாகவும், தீவினை நம்மை அண்டாமல் வீரபத்ர சுவாமி காப்பதாகவும் நம்புகின்றனர்.
சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, இங்கு 26 அடி உயரம் கொண்ட கல், பூமிக்கு அடியில் புதைந்துள்ளது. திருவிழாவின்போது இக்கல்லிற்கும் பூஜை செய்யப்படுகிறது.
ஸ்ரீவீரபத்ர சுவாமி
1,200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவீரபத்ர சுவாமி கோவில்.
- நமது நிருபர் -