/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஹனி டிராப்' குற்றச்சாட்டு ஆதாரம் இல்லை என்று சி.ஐ.டி., அறிக்கை?
/
'ஹனி டிராப்' குற்றச்சாட்டு ஆதாரம் இல்லை என்று சி.ஐ.டி., அறிக்கை?
'ஹனி டிராப்' குற்றச்சாட்டு ஆதாரம் இல்லை என்று சி.ஐ.டி., அறிக்கை?
'ஹனி டிராப்' குற்றச்சாட்டு ஆதாரம் இல்லை என்று சி.ஐ.டி., அறிக்கை?
ADDED : மே 29, 2025 11:01 PM

பெங்களூரு: கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, 74. கடந்த மார்ச் மாதம் நடந்த, கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் போது தன்னை ஹனி டிராப் செய்ய முயற்சி நடந்ததாக கூறினார். மேலும் மாநில, தேசிய அரசியல்வாதிகள் 48 பேரின் வீடியோக்கள் இருக்கும் பென்டிரைவ் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஹனி டிராப் பற்றி அமைச்சர் கூறியது, தேசிய அளவில் எதிரொலித்தது. அரசுக்கு எதிராக பா.ஜ., போராட்டமும் நடத்தியது.
இந்நிலையில், ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்றது பற்றி, சி.ஐ.டி., விசாரணைக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டார். ஹனி டிராப் முயற்சி நடந்ததாக கூறிய, பெங்களூரு ஜெயமஹால் சாலையில் உள்ள, ராஜண்ணாவின் அரசு இல்லத்திற்கு சென்று சி.ஐ.டி., போலீசார் ஆய்வு செய்தனர். ராஜண்ணா, அவரது உதவியாளர், பாதுகாவலர், வீட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தன்னை ஹனி டிராப் செய்ய முயன்ற பெண் பற்றி, ராஜண்ணா சரியான தகவல் அளிக்கவில்லை. அந்த பெண் ஊதா நிற ஜீன்ஸ், சிவப்பு நிற டாப் அணிந்திருந்தார் என்று மட்டுமே கூறினார்; வேறு எந்த அடையாளமும் கூறவில்லை. அந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், யார் வந்து, சென்றனர் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. உதவியாளர், பாதுகாவலர், வீட்டு பணியாளர்களும் பெண் வந்து சென்றது பற்றி தங்களுக்கு தெரியாது என்றும் கூறி உள்ளனர்.
இதையடுத்து டி.ஜி.பி., சலீமிடம் நேற்று சி.ஐ.டி., அதிகாரிகள் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், 'அமைச்சர் ராஜண்ணா கூறிய ஹனி டிராப் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதனால், அடுத்தகட்ட விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது' என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.