/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் 7ம் தேதி காலநிலை உச்சி மாநாடு
/
பெங்களூரில் 7ம் தேதி காலநிலை உச்சி மாநாடு
ADDED : நவ 03, 2025 05:10 AM
பெங்களூரு: மாணவர்கள் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு பெங்களூரில் வரும் 7ம் தேதி நடக்கிறது.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் காலநிலை நடவடிக்கை பிரிவு நடத்தும் 'மாணவர்கள் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு' வரும் 7ம் தேதி பெங்களூரு டவுன்ஹாலில் நடக்கிறது.
காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் மாநாட்டில் நகரின் பல பள்ளி, கல்லுாரிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பர். இவர்கள் காலநிலை மாற்றம் குறித்து விவாதித்து அதற்கான தீர்வுகளையும் வழங்குவர்.
இது குறித்து காலநிலை சிறப்பு கமிஷனர் பிரீத்தி கெலாட் கூறுகையில், ''ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலும் காலநிலை கிளப்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கிடைக்கும். இது அவர்களின் வாழ்க்கைக்கு உதவும்,'' என்றார்.

