தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நந்தினி தயிர் விலை ரூ.2 குறைக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

நந்தினி தயிர் விலை ரூ.2 குறைக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

நந்தினி தயிர் விலை ரூ.2 குறைக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு


UPDATED : நவ 03, 2026 05:33 AM

ADDED : நவ 03, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 05:33 AM ADDED : நவ 03, 2026 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: நந்தினி தயிர் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கும்படி அதிகாரிகளுக்கு, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

கர்நாடகாவில் நவ., 1ம் தேதி முதல் ஒரு லிட்டர் நந்தினி பால் எட்டு ரூபாயாகவும், தயிர் ஆறு ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநிலம் முழுதும் பொது மக்கள், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரில் கர்நாடக பால் கூட்டமைப்பு, பல்வேறு மாவட்ட பால் சங்கங்கள் அதிகாரிகளுடன் முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்கு பின் அவர் அளித்த பேட்டி:

கே.எம்.பி., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு, பல்வேறு மாவட்ட பால் சங்கத்தினர் என்னை சந்தித்து, பால் விலையை உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தனர். நந்தினி தயிரின் விலையை இரண்டு ரூபாய் குறைக்குமாறு கூறி உள்ளேன்.

பால் விலை, அதை பேக் செய்யும் விதத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும். இது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் வழங்குவர்.

வரலாற்றில் முதன் முறையாக பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலை 7 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

அத்துடன் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 8 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள 11 லட்சம் பால் உற்பத்தியாளர் குடும்பத்தினர் பயனடைவர். அவர்களின் பொருளாதாரமும் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us