தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வறட்சி பாதிப்பு குறித்து மேலும் 29 தாலுகாக்களில் ஆய்வுக்கு உத்தரவு!: எம்.எல்.ஏ., ராஜினாமா முடிவால் முதல்வர் நடவடிக்கை

வறட்சி பாதிப்பு குறித்து மேலும் 29 தாலுகாக்களில் ஆய்வுக்கு உத்தரவு!: எம்.எல்.ஏ., ராஜினாமா முடிவால் முதல்வர் நடவடிக்கை

வறட்சி பாதிப்பு குறித்து மேலும் 29 தாலுகாக்களில் ஆய்வுக்கு உத்தரவு!: எம்.எல்.ஏ., ராஜினாமா முடிவால் முதல்வர் நடவடிக்கை


UPDATED : செப் 25, 2026 05:21 AM

ADDED : செப் 25, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 05:21 AM ADDED : செப் 25, 2026 03:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், மாநிலம் முழுதும் கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, வட மாவட்டங்களில் கொளுத்தும் வெயிலால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதுடன், பயிர்களும் கருகி வருகின்றன.

அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க, அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக 101; 2வது கட்டமாக 23; 3வது கட்டமாக 53 என, மொத்தம் 177 தாலுகாக்கள் இதுவரை, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டன.

இதற்கிடையில் தங்கள் தாலுகாக்களையும், வறட்சி பாதித்த பகுதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, ஜகலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேவேந்திரப்பா, இண்டி எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல் உள்ளிட்டோர், அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

ஜகலுார் வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகா என்று நேற்று முன்தினம் அரசு அறிவித்த நிலையில், இண்டியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கவில்லை.

ராஜினாமா கடிதம் அதிருப்தி அடைந்த காங்., - எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல், தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக, சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீலிடம், கடந்த 22ம் தேதி கடிதம் கொடுத்தார். இந்த கடிதத்தை சட்டசபையில் காட்டி, அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இது, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல் எழுதிய கடிதம், சட்டசபை விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்று கூறி, அவரது ராஜினாமாவை நிராகரிக்கிறேன் என்று, சபாநாயகரும் அறிவித்தார்.

ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.,வை, முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் அழைத்து பேசி சமாதானம் செய்தனர். இண்டி, சடச்சனா தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இண்டி, சடச்சனா இந்நிலையில், கர்நாடக வருவாய் துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பீதர் மாவட்டத்தின் அவுராத்; பெலகாவி மாவட்டத்தின் கோகாக், ராமதுர்கா, சவுந்தட்டி, காக்வாட்; விஜயபுரா மாவட்டத்தின் இண்டி, சடச்சனா.

தார்வாட் மாவட்டத்தின் தார்வாட், கலகட்டகி, குந்த்கோல், அல்னாவர்; ஷிவமொக்கா மாவட்டத்தின் பத்ராவதி, ஷிகாரிபுரா, ஷிவமொக்கா, சொரப், தீர்த்தஹள்ளி.

சிக்கமகளூரு மாவட்டத்தி ன் சிக்கமகளூரு, கலசா; குடகு மாவட்டத்தின் மடிகேரி, குஷால்நகர்; தட்சிண கன்னடா மாவட்டத்தின் பெல்தங்கடி, பன்ட்வால், உல்லால்;

உடுப்பி மாவட்டத்தின் உடுப்பி, பைந்துார்; உத்தர கன்னடா மாவட்டத்தின் அங்கோலா, பட்கல், ஹலியால், சிர்சி ஆகிய 29 தாலுகாக்களில், வறட்சி குறித்து கள ஆய்வு நடத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த தாலுகாக்களில் கள ஆய்வு முடித்து, அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து, வறட்சி பாதித்த பகுதிகள் என அரசு அறிவிக்கும்.

அப்போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் எண்ணிக்கை 200ஐ தாண்டி விடும். 200 தாலுகாக்களுக்கு மேல் வறட்சி பாதித்த பகுதிகள் என, அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளது என, துணை முதல்வரும், வருவாய் துறை அமைச்சருமான பரமேஸ்வர் முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட்கல் தாலுகா துணை சபாநாயகர் மங்கள் வைத்யாவின் தொகுதி; ஷிகாரிபுரா பா.ஜ., தலைவர் விஜயேந்திராவின் தொகுதி என்பது கவனிக்கத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us