தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் பெங்களூருக்கு முக்கியத்துவம்

 பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் பெங்களூருக்கு முக்கியத்துவம்

 பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் பெங்களூருக்கு முக்கியத்துவம்


ADDED : செப் 25, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பெண்களின் பாதுகாப்பு அளிப்பது என்பது வெறும் சட்டம் மட்டும் அல்ல; அது ஒரு சமூக பொறுப்பு,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அரங்கில், நேற்று நடந்த மூன்றாவது தேசிய மகளிர் மாநாட்டை நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

ஒரு பெண் பகல் நேரத்தில் கூட, சுரங்கப்பாதையை கடந்து செல்ல இன்றும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டியுள்ளது. இது தான் இன்றைய யதார்த்தம். போலீஸ் துறை வெறும் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பாக மட்டும் இல்லாமல், சமூக மாற்றத்தை முன்னெடுப்பதாகவும் இருக்க வேண்டும்.

நமது ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்து உள்ளது என என்று கூற வேண்டும் என்றால், பெண்கள் தங்கள் உரிமைகளை சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும்.

ஏட்டு முதல் எஸ்.ஐ., வரையிலான மகளிர் போலீசாருக்கான நவீன ஓய்வறை கள், தங்கும் விடுதி வசதிகள், பணியிடங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், இரவு நேர போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகின்றன.

ஆண் போலீசாருக்கு மட்டும் உடல் கேமராக்கள் வழங்கி, பெண்களுக்கு வழங்காதது பாகுபாட்டை காண்பிக்கிறது. மகளிர் போலீசாருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தலைகவசங்கள், உடல் பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும்.

நாட்டிலேயே பெண்களின் பாதுகாப்புக்கு பெங்களூரு நகரம் முன்னுரிமை அளித்து வருகிறது. பெங்களூரு நகர போலீஸ் துறை, மகளிர் போலீசாருக்காக, 54 லட்சம் ரூபாய் செலவில் மூன்று அதிநவீன நடமாடும் கழிப்பறை வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசின், 'நிர்பயா' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட, 667 கோடி ரூபாய் மானியம், 100 சதவீதம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில், பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் தரவரிசையில் பெங்களூரு இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us