தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தலைமை தேர்தல் கமிஷனர் ராஜினாமா முதல்வர் சிவகுமார் வலியுறுத்தல் 

 தலைமை தேர்தல் கமிஷனர் ராஜினாமா முதல்வர் சிவகுமார் வலியுறுத்தல் 

 தலைமை தேர்தல் கமிஷனர் ராஜினாமா முதல்வர் சிவகுமார் வலியுறுத்தல் 


ADDED : செப் 25, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''ஜனநாயகத்தையும், வாக்களிக்கும் உரிமையையும் பாதுகாக்கும் வகையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என, முதல்வர் சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஓட்டு போடும் உரிமை நாம் வாழ்வதற்கான உரிமை. ஆனால், மத்திய அரசு வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறிக்கும் வகையில் செயல்படுகிறது. இதை காங்கிரஸ் தலைவர்கள் பல முறை அம்பலப்படுத்தியுள்ளனர். சாமானிய மக்களின் ஓட்டுரிமை, அரசியல் நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது.

தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆணையத்தின் தன்னாட்சி நிலை தவறாக பயன்படுத்தப்படுகிறது.

உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு அறிவிப்போ, முடிவோ ஒருதலைபட்சமாக எடுக்க முடியாது.

ஜனநாயகத்தையும், வாக்களிக்கும் உரிமையையயும் பாதுகாக்கும் வகையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தானாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும்.

எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் மூலம், மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் அரசை, பா.ஜ., விழுங்கியுள்ளது. கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை முடிக்க, முயற்சிகள் நடக்கின்றன. இங்கும் ஒரு கோடிக்கு அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இங்கு எஸ்.ஐ.ஆர்., செயல்முறை சரியாக நடக்கவில்லை. வாக்காளர் பட்டியல் படிவங்கள் 6, 7, 8ல் மாற்றம் செய்யும் நடைமுறை ஜனநாயகமற்றது. இதன் மூலம் எழுத்தறிவற்ற, நலிந்த பிரிவினர் குரல் ஒடுக்கப்படுகிறது.

எனவே, கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., செயல்முறையை ரத்து செய்துவிட்டு, வாக்காளர் பட்டியலை மீண்டும் புதிதாக திருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us