கம்பாலா விளையாட்டு மேம்பாட்டுக்கு முதல்வர் ரூ.5 கோடி நிதியுதவி
கம்பாலா விளையாட்டு மேம்பாட்டுக்கு முதல்வர் ரூ.5 கோடி நிதியுதவி
ADDED : ஜூன் 20, 2026 10:56 PM

உடுப்பி: ''கம்பாலா விளையாட்டின் மேம்பாட்டுக்கு, அடுத்த பட்ஜெட்டில், 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்,'' என, கர்நாடகா கம்பாலா அசோசியேஷன் தலைவர் தேவிபிரசாத் ஷெட்டி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
இந்த ஆண்டு மைசூரு தசராவில் கம்பாலா விளையாட்டை நடத்த, மாநில அரசு ஆர்வமாக உள்ளது. கர்நாடக பால் கூட்டமைப்பின் ஆதரவுடன் பாரம்பரிய விளையாட்டான கம்பாலாவை பிரபலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டு துறை, சுற்றுலா துறை, கன்னட மற்றும் கலாசார துறை ஆகியவற்றின் மூலம் கம்பாலாவிற்கு அரசு ஆதரவு தருமாறு முதல்வர் சிவகுமாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கம்பாலா விளையாட்டை மேம்படுத்த அடுத்த பட்ஜெட்டில், 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, முதல்வர் சிவகுமார் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
கம்பாலா பவன் கட்ட, நிதி ஒதுக்கவும்; பயிற்சி மையம் அமைக்க நிதி வழங்கக் கோரியும் மாநில விளையாட்டு துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
