தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பீதர் அரசு மருத்துவமனையில் 'லோக் ஆயுக்தா' அதிரடி சோதனை

 பீதர் அரசு மருத்துவமனையில் 'லோக் ஆயுக்தா' அதிரடி சோதனை

 பீதர் அரசு மருத்துவமனையில் 'லோக் ஆயுக்தா' அதிரடி சோதனை


ADDED : ஜூன் 20, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீதர்: பீதரின், பிரிம்ஸ் மருத்துவமனையில், உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, நேற்று திடீர் ஆய்வு செய்தார். அங்கிருந்த அவல நிலையை கண்டு, கோபமடைந்து, மருத்துவமனை அதிகாரிகளை கேள்விகளால் மிரள வைத்தார்.

பீதரின், அரசு சார்ந்த பிரிம்ஸ் மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பது இல்லை. டாக்டர்கள் இருப்பது இல்லை. நோயாளிகளின் குடும்பத்தினரிடம், மருத்துவ ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக, தொடர்ந்து லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்தது.

எனவே, உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா தலைமையிலான குழுவினர், நேற்று காலை பிரிம்ஸ் மருத்துவமனைக்கு, திடீர் என ஆய்வு செய்தனர்.

மருத்துவமனையில் மெத்தைகள், தலையணைகள் மோசமான நிலையில் இருந்ததை கண்டு, கோபமடைந்த நீதிபதி வீரப்பா,இங்கு இருக்கும் மெத்தைகள், தலையணைகளை பார்த்தால், சிறையில் இருக்கும் மெத்தைகள், தலையணைகளை போன்றுள்ளன.

இத்தகைய மெத்தைகளின் மீது, டாக்டர்களான நீங்கள் படுப்பீர்களா... ''மருத்துவமனைக்காக அரசு வழங்கும் கோடிக்கணக்கான ரூபாயை, என்ன செய்கிறீர்கள்.

ஆறு மாடி கட்டடத்தில் மெத்தை இல்லை, குடிநீர் இல்லை என்றால் எப்படி... நோயாளிகளின் உறவினர்களுக்கு அமர, இருக்கைகளும் இல்லை. எப்படி மருத்துவமனையை நடத்துகிறீர்கள்...' என, மருத்துவ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

சோதனையின் போது, மருத்துவமனையின் லேப் டெக்னீஷியன் சஞ்சுகுமார் என்பவரிடம், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதை கண்ட நீதிபதி வீரப்பா, 'அரசு மருத்துவமனையின், லேப் டெக்னீஷியனிடம் ஒரு லட்சம் ரொக்கமும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் எப்படி வந்தது, என அதிருப்தி தெரிவித்தார்.

பணத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யும்படி தன்னுடன் வந்த லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பிரிம்ஸ் மருத்துவமனையில் சோதனையை முடித்து கொண்டு, லோக் ஆயுக்தா குழுவினர், பீதரின் மத்திய பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அங்குள்ள துாய்மை, பயணியருக்கு அளிக்கப்படும் சலுகைகளை நீதிபதி கேட்டறிந்தார். பஸ் நிலைய வளாகம் அசுத்தமாக இருந்ததை கண்ட நீதிபதி வீரப்பா, கே.எஸ்.ஆர்.டி.சி., டிப்போ அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தார்.

அதன் பின், பஸ் நிலையத்தில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று, உணவின் தரம், துாய் மையை பரிசீலித்தார். ஹோட்டல்களில் துாய்மை இல்லாததை கண்டு, கோபமடைந்த நீதிபதி, பொதுமக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, துாய்மையை காப்பாற்றுங்கள் என, அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us