தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஆஷா ஊழியர்களுடன் முதல்வர் பேச்சு தோல்வி

ஆஷா ஊழியர்களுடன் முதல்வர் பேச்சு தோல்வி

ஆஷா ஊழியர்களுடன் முதல்வர் பேச்சு தோல்வி


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆஷா ஊழியர்களுடன் முதல்வர் சிவகுமார் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.

மாதம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் ஆஷா ஊழியர்கள் தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். நேற்று இரண்டு பேர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, நேற்று பேச்சு நடத்தினார். அப்போது, சுகாதார அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆஷா ஊழியர்களுக்கு ஆதரவாக பேசினார்.

இதையடுத்து, முதல்வர் சிவகுமாரின் கிருஷ்ணா இல்லத்தில் கர்நாடக ஆஷா ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடந்தது. சிவகுமார், அமைச்சர் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘உங்கள் கோரிக்கைகள் குறித்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில் விவாதித்து முடிவு எடுப்பேன்’ என சிவகுமார் கூறினார்.

உடனடியாக மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என எதிர்பார்த்திருந்த ஊழியர்கள், இந்த பதிலால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், பேச்சு தோல்வி அடைந்தது.

பேச்சுக்கு பின், முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:

மாதம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கும்படி என்னிடம் கோரிக்கை வைத்தனர். நான் அவர்களிடம் உண்மையை கூறினேன்.

இந்த விஷயத்தில் என்னால் மட்டுமே தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. இது குறித்து சட்டசபை, நிதித்துறையிடம் விவாதிக்கப்படும். பொருளாதார நிலையை அறிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, தங்கள் வீடுகளுக்கு செல்லுங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us