தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போலி பில் வழங்குவோர் மீது நடவடிக்கை முதல்வர் சிவகுமார் கடும் எச்சரிக்கை

 போலி பில் வழங்குவோர் மீது நடவடிக்கை முதல்வர் சிவகுமார் கடும் எச்சரிக்கை

 போலி பில் வழங்குவோர் மீது நடவடிக்கை முதல்வர் சிவகுமார் கடும் எச்சரிக்கை


ADDED : ஆக 12, 2026 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 12:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பணிகள் முடித்ததாக இரட்டை பில்கள், போலி பில்கள் வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடகா, பெங்களூரு விதான் சவுதாவில் அரசு ஊழியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

ஊழல் விஷயத்தில் நான் சமரசம் செய்ய மாட்டேன். அதிகாரிகளின் ஒவ்வொரு செயலையும் ஆராய்வேன். அரசின் திட்டம், ஒவ்வொரு பயனாளிக்கும் தகவல் கிடைக்க வேண்டும். நம்மிடம் உள்ள இரட்டை பில்கள், போலி பில்ககள் போடும் நபர்களை ஒழிப்பேன்.

ஆவண முறைகேடுகளை தடுக்கவே, சொத்து பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. தாலுகா அதிகாரிகள், தங்களின் அன்றாட நிகழ்ச்சி விபரங்களை, தங்களின் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

கூட்டுறவு மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு, நீதி வழங்கும் அதிகாரம் உள்ளது. நீதிபதி தரப்பில் இருந்து கொண்டு, எந்த அநீதியும் இழைக்கக்கூடாது. யாருடைய அழுத்தத்திற்கும் அடி பணியாமல் பணியாற்ற வேண்டும். கூட்டத் தொடர் முடிந்த பின், ஒவ்வொரு தாலுகாவுக்கும் செல்வேன்.

மாநில மக்களுக்கு சேவை செய்ய, நாங்கள் உட்பட, 5.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கெங்கல் ஹனுமந்தையா முதல் இன்று வரை அனைத்து முதல்வர்களும், தங்கள் அனுபவம், சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்துள்ளனர். சிறை கைதிகளை கொண்டு விதான் சவுதாவை கெங்கல் ஹனுமந்தையா கட்டினார்.

அப்போது சில கைதிகள், அவர் மீது செருப்பை வீசினர். விஸ்வேஸ்வரய்யா, ஒரு ரூபாய்க்கு இந்த பணியில் ஈடுபட்டார்.

மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்த அதே மேடையில், வாஜ்பாய், உலக தலைவர்கள் முதலில் டில்லி சென்றுவிட்டு, நாட்டின் மற்ற நகரங்களுக்கு செல்வர்.

ஆனால், இப்போது அவர்கள் பெங்களூரு வந்த பின், மற்ற நகரங்களுக்கு செல்கின்றனர் என்று கூறியிருந்தேன்.

இது காங்கிரசின் சாதனை என்று கூறவில்லை. இது மைசூரு மன்னர் காலம் முதல் நிலவிய துாய்மையான ஆட்சி, மாணவர்களின் அறிவு, திறமையான மனிதவளம் ஆகியவற்றின் விளைவு என்று கூறினேன்.

எங்களிடம் உள்ள கல்வி, சுகாதார வசதிகள் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஈடு இணையற்றவை. நாங்கள் மக்களுக்காக பணியாற்றுகிறோம். உங்கள் மனசாட்சிப்படி செயல்படுங்கள்.

அரசின் வாக்குறுதி திட்டங்களை கைவிடுவாக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us