தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ம.ஜ.த., ஆட்சிக்கு வரவே வராது; முதல்வர் சித்தராமையா உறுதி

 ம.ஜ.த., ஆட்சிக்கு வரவே வராது; முதல்வர் சித்தராமையா உறுதி

 ம.ஜ.த., ஆட்சிக்கு வரவே வராது; முதல்வர் சித்தராமையா உறுதி


ADDED : ஜன 26, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ''கர்நாடகாவில் இனி எந்த காலத்திலும் ம.ஜ.த., ஆட்சிக்கு வராது,'' என முதல்வர் சித்தராமையா கூறினார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பா.ஜ.,வுடன் கைகோர்ப்பதன் மூலம் ம.ஜ.த., ஆட்சிக்கு வரமுடியும் என நினைக்கிறது. இது, எந்த காலத்திலும் நடக்காது. கர்நாடகாவில் இனி எந்த காலத்திலும் ம.ஜ.த., ஆட்சிக்கு வராது. அடுத்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறாது. ஒரு வேளை வெற்றி பெற்றால் கூட ம.ஜ.த.,வுக்கு ஆட்சியில் பங்கு தரப்படாது.

ஹெச்.டி.ரேவண்ணா உட்பட யாருடைய வழக்கிலும் நாங்கள் தலையிடுவதில்லை. போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றனர். ரேவண்ணாவை நான் ஏன் வெறுக்க வேண்டும்.

சட்டசபையில், கவர்னருக்கு நடந்தவை குறித்து விளக்கம் அளிக்க மாட்டோம். குடியரசு தினத்தன்று கவர்னர் உரை நிகழ்த்த வேண்டும். உரையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். குடியரசு தின விழாவில் கவர்னர் கட்டாயம் உரையாற்ற வேண்டும் என விதி எதுவுமில்லை. கவர்னர் என்ன செய்வார் என்பது எனக்கு தெரியாது. அடுத்த மாதம் 2ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக பட்ஜெட் தயாரிப்பு கூட்டங்கள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us