/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா முதல்வர் சித்தராமையா விளக்கம்
/
வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா முதல்வர் சித்தராமையா விளக்கம்
வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா முதல்வர் சித்தராமையா விளக்கம்
வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா முதல்வர் சித்தராமையா விளக்கம்
ADDED : டிச 23, 2025 06:50 AM

மைசூரு: ''வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவை, ஆத்திரமூட்டும் வகையில் பேசுபவர்கள் மட்டுமே எதிர்க்கின்றனர்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவை, ஆத்திரமூட்டும் வகையில் பேசுவோர் மட்டுமே எதிர்க்கின்றனர். சட்டம் அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். பா.ஜ.,வினர் மட்டும் ஏன் எதிர்க்கின்றனர். வெறுப்பு பேச்சால், சமூகத்தில் அமைதியை கொண்டு வர முடியுமா?
சமூகத்தில் அமைதியும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க, இந்த சட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமீப நாட்களாக வெறுப்பு பேச்சு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளோம்.
wபிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான கிரஹலட்சுமி பணம் வராதது குறித்து சரிபார்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். இதுவரை 23 மாதங்களுக்கு கிரஹலட்சுமி பணத்தை பயனாளிகளுக்கு வழங்கி உள்ளோம். எங்களிடம் நிதி இல்லை என்றால், இதை வழங்கியிருக்க முடியுமா?
கிரஹலட்சுமி பணம் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செல்லும்போது, மோசடி என்ற கேள்விக்கே இடமில்லை. அதை வேறு யாரும் எடுக்கவும் முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

