sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஆதார விலையில் மக்காச்சோள கொள்முதல் பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்

/

 ஆதார விலையில் மக்காச்சோள கொள்முதல் பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்

 ஆதார விலையில் மக்காச்சோள கொள்முதல் பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்

 ஆதார விலையில் மக்காச்சோள கொள்முதல் பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்


ADDED : நவ 23, 2025 04:06 AM

Google News

ADDED : நவ 23, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மக்காச்சோள விலை குறைவு எதிரொலியாக, ஐந்து அம்ச கோரிக்கையுடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

கர்நாடகாவில் இந்த பருவத்தில் 17.94 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளமும், 4.16 லட்சம் ஹெக்டேரில் பச்சைப்பயறும் பயிரிடப்படுகின்றன. 54.74 லட்சம் டன் மக்காச்சோளமும், 1.983 லட்சம் டன் பச்சைப் பயறும் மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது செழிப்புக்கான வாய்ப்பாக விவசாயிகளுக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போதையை சந்தை நிலவரம் நெருக்கடியாக மாற்றி உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு டன் மக்காச்சோளத்திற்கு 2,400 ரூபாய் என்றும், ஒரு டன் பச்சைப்பயறுக்கு 8,768 ரூபாய் என்றும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

மறுபரிசீலனை ஆனாலும், கர்நாடகாவில் தற்போதைய சந்தை நிலவரப்படி மக்காச்சோளம் ஒரு டன்னுக்கு 1,600 முதல் 1,800 ரூபாயாகவும்; பச்சைப்பயறு ஒரு டன் 5,400 ரூபாயாகவும் உள்ளது .

இது முன் எப்போதும் இல்லாத விலை சரிவு. இந்த பிரச்னையை தீர்க்க, பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, இந்திய உணவு கழகம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் பிற நிறுவனங்களை, குறைந்தபட்ச ஆதார விலையில் மக்காச்சோளம், பச்சைப்பயறு வாங்க உத்தரவிட வேண்டும்.

எத்தனால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மக்காச்சோளம் வாங்க வேண்டும் என்பதை, மத்திய அரசு கட்டாயப்படுத்த வேண்டும். ஊக்கத்தொகை விவசாயிகளை சென்றடையவில்லை என்றால், எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நிறம் இழப்பு கடந்த ஆண்டு மியான்மர், உக்ரைனில் மற்றும் பிற நாடுகளில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்பட்டதால், நமது நாட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இத்தகைய இறக்குமதி உள்நாட்டு விலையில் வீழ்ச்சி ஏற்படுத்தியதுடன், விவசாயிகளின் நியாயமான வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்காச்சோள இறக்குமதியை நிறுத்தும்படி, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

எதிர்பாராத மழை காரணமாக, கர்நாடகாவின் சில பயிர்கள் அதன் நிறத்தில் 6 முதல் 10 சதவீதத்தை இழந்துள்ளது. அதிகபட்சமாக 4 சதவீத பயிர்கள் நிறம் இழந்தாலும், குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் வாங்க முடியும். எங்கள் பயிர்கள் உணவு நோக்கங்களுக்கு ஏற்றது.

எனவே மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சரை, குறைந்தபட்ச ஆதார விலையில் பயிர்களை வாங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us