/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கர்நாடகா அரசியலில் பல மாற்றங்கள் வெடிக்கும்' ம.ஜ.த., விழாவில் மத்திய அமைச்சர் குமாரசாமி கணிப்பு
/
'கர்நாடகா அரசியலில் பல மாற்றங்கள் வெடிக்கும்' ம.ஜ.த., விழாவில் மத்திய அமைச்சர் குமாரசாமி கணிப்பு
'கர்நாடகா அரசியலில் பல மாற்றங்கள் வெடிக்கும்' ம.ஜ.த., விழாவில் மத்திய அமைச்சர் குமாரசாமி கணிப்பு
'கர்நாடகா அரசியலில் பல மாற்றங்கள் வெடிக்கும்' ம.ஜ.த., விழாவில் மத்திய அமைச்சர் குமாரசாமி கணிப்பு
ADDED : நவ 23, 2025 04:06 AM
சேஷாத்திரிபுரம்: ''மாநில அரசியலில் இன்னும் சில மாதங்களில் பல மாற்றங்கள் வெடிக்கும். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்,'' என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி கணித்துள்ளார்.
பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ம.ஜ.த.,வின் ஜே.பி., பவனில் கட்சியின் 25ம் ஆண்டு விழாவின் இரண்டாம் நாளான நேற்று, கட்சியின் சின்னம் பொறித்த வெள்ளிக்காசை, கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி, மாநில இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி, மேல்சபை ம.ஜ.த., துணைத்தலைவர் டி.ஏ.ஷ்ரவணா உட்பட தலை வர்கள் வெளியிட்டனர்.
விழாவில் குமாரசாமி பேசியதாவது:
மாநிலத்தில் நடக்கும் அரசியல் முன்னேற்றங்களை பார்த்தால், வரும் நாட்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாற்றங்கள் வரும். அரசியலில் யார் என்ன முடிவுகளை எடுப்பர் என்று சொல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. சில மாதங்களில் அரசியல் புரட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மோசமான நிர்வாகம், வரி, விலைவாசி உயர்வால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மாநிலத்தின் பொருளாதார நிலை மோசமான நிலையில் உள்ளது. மாநிலத்தின் கடன், 7.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. சித்தராமையா மட்டும் 5.50 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி உள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, தன் முழு வாழ்க்கையையும் மக்களுக்காக அர்ப்பணித்தார். உத்தரவாதம் என்ற பெயரில் மாநில அரசு கொள்ளை அடித்து வருகிறது.
இரண்டு முறை முதல்வராக இருந்தபோதும், முழு பெரும்பான்மை அரசு கிடைக்கவில்லை. நெருக்கடியை மீறி பெண்களின் நலனுக்காக லாட்டரியை தடை செய்தேன். மாநில விவசாயிகளின் 25,000 கோடி முதல் 26,000 கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தேன். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 500 முதல் 1000 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கினேன்.
மாநிலத்தின் 25 முதல் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் சித்தராமையா, என்ன சாதித்தார்?
இவ்வாறு அவர் பேசினார்.

