/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில் திரைப்படங்கள் இருக்க முதல்வர் விருப்பம்
/
சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில் திரைப்படங்கள் இருக்க முதல்வர் விருப்பம்
சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில் திரைப்படங்கள் இருக்க முதல்வர் விருப்பம்
சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில் திரைப்படங்கள் இருக்க முதல்வர் விருப்பம்
ADDED : ஜன 30, 2026 06:37 AM

பெங்களூரு: ''சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், திரைப்படங்கள் இருக்க வேண்டும்,'' என்று, முதல்வர் சித்தராமையா விருப்பம் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு விதான் சவுதா படிக்கட்டில் 17 வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
17 வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் 70 நாடுகளின் 240 திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த விழா துாதராக நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, சமூக போராட்டத்திலும் பங்கெடுத்து உள்ளார்.
திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் இருக்க கூடாது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில் இருக்க வேண்டும். இன்றைய சமூகத்தில் சமத்துவமின்மை, வறுமை நிலவுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்காக குரல் கொடுக்கும் வகையில், ராஜ்குமார் நடித்த திரைப்படங்களை இருந்ததை பார்த்து உள்ளோம்.
பிற நாட்டு மக்களின் வாழ்க்கை, அரசியல், சமூகம், பெண்களின் நிலை பற்றி நாம் தெரிந்து கொள்ள தான், சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த பொன்னான வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சினிமா துறை வளர்ச்சிக்கு, காங்கிரஸ் அரசு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை செயலர் ஷாலினி, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் சாது கோகிலா, சிவாஜிநகர் எம்.எல்.ஏ., ரி ஸ்வான் அர்ஷத், நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ருக்மினி வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துவக்க நிகழ்ச்சியில் நெதர்லாந்து நாட்டின் 'போர்ட் பேக்கேஜ்' என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.

