sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சினிகடலை

/

சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : ஏப் 06, 2025 05:30 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இரண்டாவது குழந்தை

நடிகை சஞ்சனா கல்ராணி குடும்பத்தினர், மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இவர்களின் மகிழ்ச்சிக்கு, இவர் இரண்டாவதாக கருவுற்றதே காரணம். கன்னடத்தில் பிசி நடிகையாக இருந்த சஞ்சனா கல்ராணி, கொரோனா நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் நடிப்பை குறைத்துக் கொண்டார். முதல் முறை கருவுற்ற பின், நடிப்புக்கு முழுக்குப் போட்டார். பிரசவத்துக்குப் பின், ஆண் குழந்தையை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினார். இவரை திரையில் பார்க்க முடியவில்லை. தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த விஷயத்தை அவர், சோஷியல் மீடியா வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். தன் போட்டோவையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

* திரில்லர் கதை

இயக்குனர் ஜனார்த்தன் சிக்கண்ணா இயக்கத்தில் தயாரான, 'அஞ்ஞாதவாசி' படம் ஏப்ரல் 11ல் திரைக்கு வரவுள்ளது. இதில் ரங்காயணா ரகு, பாவனா கவுடா உட்பட, பலர் நடித்துள்ளனர். இது மலைப்பகுதியில் நடக்கும் கற்பனை கதையாகும். சிறிய கிராமத்தில் போலீஸ் நிலையம் அமைந்து, 25 ஆண்டுகள் ஆகின்றன. அங்கு ஒரு வழக்கும் பதிவாகவில்லை. 1997ல் ஒரு கொலை வழக்குப் பதிவாகிறது. அனுபவம் இல்லாத போலீஸ் அதிகாரி ஒருவர், கிராமத்துக்கு வந்து கொலையாளியை கண்டுபிடிப்பதே கதையாகும். மர்ம முடிச்சுகள் நிறைந்த படமாகும். கதையை கேட்டதும் பிடித்து போய், முதலீடு செய்ய ஹேமந்த் முன் வந்தாராம்.

* பேச்சுலருக்கு மேரேஜ்

நடிகர் ஷைன் ஷெட்டி, பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் பாராட்டு பெற்றவர். தற்போது 'ஜஸ்ட் மேரிட்' என்ற படத்தில் நடித்துள்ளார். பெண் பிள்ளைகளே அதிகம் குடும்பம் ஒன்றில், ஆண் குழந்தை பிறக்கிறது. அவரை மிகவும் செல்லமாக வளர்க்கின்றனர். அவர் ஹாயாக பேச்சுலர் வாழ்க்கை வாழ்கிறார். இப்படிப்பட்டவருக்கு திருமணம் செய்து வைத்தால், என்ன ஆகும், இவர் மாறுகிறாரா என்பதே கதையின் சாராம்சமாகும். படத்தில் அங்கிதா அமர் நாயகியாக நடித்துள்ளார். மூத்த நடிகர்கள் தேவராஜ், அச்யுத்குமார உட்பட, பல கலைஞர்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்தது.

* கிராமத்து பின்னணி

பெரும்பாலும் புதியவர்களே நடிக்கும், 'உதய சூர்யா' திரைப்பட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. பிரகாஷ் ராஜ் கதை எழுதி, இயக்கியுள்ளார். காதலில் மோசம் போன இரண்டு நண்பர்களின் கதையை படமாக்கியுள்ளனர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னியுள்ளனர். கிராமத்து பாஷையை பயன்படுத்தியுள்ளனர். ஷிவமொக்கா, நாமதி, ஹொன்னாளி உட்பட, பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இயக்குனர் பிரகாஷ் ராஜ், இப்படத்தின் நாயகன். திரிவேணி நாயகியாக நடித்துள்ளார். ஏப்ரல் மூன்றாம் வாரம் திரைக்கு வரவுள்ளது.

* அவலங்களுக்கு எதிர்

சமீப ஆண்டுகளாக, நடிகர்கள் இயக்குனராகவதும், தயாரிப்பாளராவதும் அதிகரிக்கிறது. அந்த வரிசையில் நடிகர் அஜய் ராவ் சேர்ந்துள்ளார். இவர் நாயகனாக நடித்து, தயாரிக்கும் 'யுத்த காண்டா' திரைப்படம், ஏப்ரல் 18ம் தேதி திரைக்கு வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, சிறார்கள் தவறாக பயன்படுத்தப்படுவது உள்ளிட்ட சமூக அவலங்களை தோலுரித்து காட்டியுள்ளனர். தனக்கு ஏற்பட்ட அநியாயத்தை எதிர்த்து பெண் ஒருவர் போராடுகிறார். குற்றங்களை ஒடுக்க கடுமையான சட்டம் தேவை என்பதை படத்தின் மூலம் உணர்த்தியுள்ளனர். இந்த படத்தை தயாரிக்க அஜய் ராவ், அதிகமாக கடன் வாங்கியுள்ளாராம்.






      Dinamalar
      Follow us