
* ஸ்டார் ஹீரோ ஜோடி
நடிகை மாலாஸ்ரீயின் மகள் ஆராதனா ராம், கன்னடத்தில் 'காடேரா' திரைப்படம் மூலம், திரையுலகில் நுழைந்தவர். தற்போது இரண்டாவது படத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் நடிகர் உபேந்திரா நாயகனாக நடிக்கிறாராம்.
இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'முதல் படத்திலேயே, தர்ஷன் போன்ற ஸ்டார் நடிகருடன், ஆராதனா ராம் நடித்தார். 2வது படத்திலும் ஸ்டார் ஹீரோ உபேந்திராவுடன் ஜோடியாக நடிக்கிறார். படத்துக்கு 'நெக்ஸ்ட் லெவல்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். படத்தில் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும், என்றனர்.
* 50 வேடங்களில் ராஜ் கமல்
நடிகர் கமல் ராஜ் நடிக்கும், மூன்று புதிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு படத்தில், 50 வேடங்களில் நடிக்கிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ''மூன்று படங்களின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 'நாளே நம்ம பரவசே' என்ற படத்தில், நான் 50 வேடங்களில் நடிக்கிறேன். படத்தை பத்து இயக்குனர்கள் இயக்குவர். 'முகமது ஜிந்தாபாத்' என்ற படத்திலும் நடிக்கிறேன்.
''இதில் 14 பாடல்கள் உள்ளன. இது கன்னடம், ஹிந்தி உட்பட, பல மொழிகளில் தயாராகிறது. மூன்று படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. டிசம்பரில் திரையிட திட்டமிட்டுள்ளோம். நான் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு முதலீடு செய்துள்ளேன். திரையுலகை கற்றி ஓரளவு தெரிந்து கொண்டுள்ளேன்,'' என்றார்.
* 24 நாளில் முடிந்த ஷூட்டிங்
கதாசிரியர் சதாசிவாவின் சிறுகதை ஒன்று, திரைப்படமாகிறது. இப்படம் குறித்து, இயக்குனர் பரம் குப்பி கூறுகையில், ''படம் இரண்டு கால கட்டங்களில் செல்லும். முதலாவது ஜோடியின் காதல் தோற்கும். இரண்டாவது ஜோடியின் காதல் வெற்றி பெறும். படத்தில் மழையும் முக்கியமான கதாபாத்திரமாகும்.
''சிருங்கேரி, ஹொரநாடு, ஹரிஹரிபுரா, ஆகும்பேவின் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. 24 நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம். லிகித், ஜெயவர்தன் நாயகர்களாக, சுலக்ஷா கைரா, பூமிகா கவுடா நாயகியராக நடித்துள்ளனர். 1980ல் நடக்கும் அழகான கதையாகும். படத்தில் அர்த்தமுள்ள காட்சிகள் உள்ளன,'' என்றார்.
* தம்பதியின் காதல் கதை
பிரபல இசை அமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இயக்கும், 'ஜஸ்ட் மேரிட்' திரைப்படத்தின், மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, அஜனீஷ் லோக்நாத் கூறுகையில், ''ஏற்கனவே ஒரு பாடலை வெளியிட்டோம். ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. தற்போது இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளோம். இப்பாடலை அனன்யா பட் பாடியுள்ளார். இதில் ஷைன் ஷெட்டி நாயகன், அவருக்கு ஜோடியாக அங்கிதா அமர் நடித்துள்ளார். புதுமண தம்பதியின் காதல் கதை என்றாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும். படத்தில் பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர்,'' என்றார்.
* 'லவ் மாக்டெயில் - 3'
கன்னட திரையுலகின் அழகான ஜோடியான கிருஷ்ணா, மிலனா நாகராஜ் நடிப்பில் திரைக்கு வந்த, 'லவ் மாக்டெயில்' , 'லவ் மாக்டெயில் - 2' என, இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகின. தற்போது, 'லவ் மாக்டெயில் -3' தயாராகிறது. இதை பற்றி கிருஷ்ணா கூறுகையில், மற்ற இரண்டு படங்களை விட, மூன்றாவது படம் அதிக பட்ஜெட்டில் தயாராகிறது. முதல் பாகத்தில் இருந்த அதே கதாபாத்திரங்கள், மூன்றாவது பாகத்திலும் இருக்கும். பெங்களூரில் நடக்கும் கதை என்றாலும், கதை வெவ்வேறு ஊர்களுக்கு பயணிக்கும். இரண்டு படங்கள் வெற்றி அடைந்தன. மூன்றாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என, நம்புகிறோம்,'' என்றார்.
* டாக்டர் வேடத்தில் அஸ்வினி
விஜய ராகவேந்திரா மற்றும் அஸ்வினி சந்திரசேகர் இணைந்து நடித்த, 'ரிப்பன் சாமி' படத்தின் டீசர், சமீபத்தில் திரைக்கு வந்தது. தன் கதாபாத்திரம் குறித்து, அஸ்வினி கூறுகையில், ''படத்தில் விஜய ராகவேந்திராவின் மனைவியாக மங்களா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதில் நான் டாக்டர். நாயகனுக்கு உள்ள அதே முக்கியத்துவம், எனக்கும் அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். சில ஆண்டுகளாக நான் படங்களில் நடிக்கவில்லை. மக்களின் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்,'' என்றார்.
***
டாக்டர் வேடத்தில் அஸ்வினி
விஜய ராகவேந்திரா மற்றும் அஸ்வினி சந்திரசேகர் இணைந்து நடித்த, ரிப்பன் சாமி பட த்தின் டீசர், சமீபத்தில் திரைக்கு வந்தது. தன் கதாபாத்திரம் குறித்து, அஸ்வினி கூறுகையில், ''படத்தில் விஜய ராகவேந்திராவின் மனைவியாக மங்களா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதில் நான் டாக்டர். நாயகனுக்கு உள்ள அதே முக்கியத்துவம், எனக்கும் அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். சில ஆண்டுகளாக நான் படங்களில் நடிக்கவில்லை. மக்களின் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புகி றேன்,'' என்றார்.