sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சினிகடலை

/

சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : ஆக 10, 2025 02:47 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீண்ட இடைவெளி

நடிகர் கோமல் நடிப்பில், சீனிவாஸ் தயாரிக்கும் ரோலெக்ஸ் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் கோமலுக்கு ஜோடியாக சோனல் மந்த்ரோ நடித்துள்ளார். இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில், கோமல் நடித்துள்ளார். காமெடி, சென்டிமென்ட், குடும்ப பின்னணி கதை கொண்டது. நீண்ட இடைவெளிக்கு பின், இவர் படத்தில் நடிக்கிறார். இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. விரைவில் முடித்து படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தசரா நேரத்தில் திரையிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

* பிரம்மாண்ட செட்

நடப்பாண்டு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில், ரிஷப் ஷெட்டி இயக்கி, நடிக்கும் காந்தாரா 1 திரைப்படமும் ஒன்றாகும். படம் திரைக்கு வரும் நிலையில், நாயகி ருக்மிணி வசந்தின் போஸ்டரை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் அவர் 'கனகவதி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதம்பர் ஆட்சி காலத்தின் நடந்ததாக கூறப்படும் கதையை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. படத்துக்காக ஒரு புதிய உலகத்தையே, ரிஷப் ஷெட்டி உருவாக்கியுள்ளாராம். பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது. படப்பிடிப்பில் 3,000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுள்ளனராம்.

* ஆடியோ விற்பனை

நடிகர் துனியா விஜய் இயக்கி நடிக்கும், லேண்ட் லார்டு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே, ஆடியோ உரிமை பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. ஆனந்த் ஆடியோ நிறுவனம், இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளதாம். பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளன. படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துள்ளது. நடிகை ரசிதா ராம், துனியா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இதே படத்தின் மூலமாக இவரது மூத்த மகள் ரிதன்யா, திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தசரா அல்லது தீபாவளி நேரத்தில், படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

*காமெடி கதை

நடிகர் யஷ்ஷின் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பில் உருவான, கொத்தலவாடி திரைப்பட டீசர் சமீபத்தில் வெளியானது. முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், இரண்டாவது படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதில் நடிகர் சரண், நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நகைச்சுவைக்கு பெயர் பெற்றவர். இவர் நடிக்கும் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். எனவே முதல் படத்தில் ஆக்ஷன் கதையை படமாக்கிய புஷ்பா அருண்குமாரின் அடுத்த படம், காமெடி கதையாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.

* சுற்றுலா அனுபவங்கள்

இன்றைய நடிகர், நடிகையர் நடிப்புடன் நிற்காமல் இயக்கம், தயாரிப்பிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வரிசையில் நடிகை ஐஷானி ஷெட்டியும் சேர்ந்துள்ளார். வாஸ்து பிரகாரா படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது சகுந்தலா என்ற படத்தில் நடிக்கிறார். சொந்தமாக படக்கம்பெனி துவக்கியுள்ளார். முதலில் குறும்படத்தை தயாரித்த இவர். இப்போது திரைப்படத்தை தயாரிப்பதுடன், இயக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். சுற்றுலாவுக்கு சென்ற போது, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை படமாக்குகிறார்.

* தந்தையும், தனயனும்

இதற்கு முன் தாயவ்வா என்ற படத்தில் நடித்த கீதப்பிரியா சுரேஷ்குமார், இப்போது அபரசிதா என்ற படத்தில் நடிக்கிறார். இதனை விஸ்வநாத் இயக்குகிறார். இது சமூக அக்கறை கொண்ட கதையாகும். படத்தில் மூத்த நடிகர் ஸ்ரீநாத், சிந்து லோக்நாத், நிகிதா உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத்தின் மகன் ரோஹித்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கொரோனாவுக்கு பின், ஸ்ரீநாத் நடிக்கும் முதல் படம் இதுவாகும். கீதப்பிரியாவின் கணவர் சுரேஷ்குமார் தயாரிக்கிறார். அக்டோபரில் திரைக்கு வருகிறது.

சுற்றுலா அனுபவங்கள்

இன்றைய நடிகர், நடிகையர் நடிப்புடன் நிற்காமல் இயக்கம், தயாரிப்பிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வரிசையில் நடிகை ஐஷானி ஷெட்டியும் சேர்ந்துள்ளார். வாஸ்து பிரகாரா படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது சகுந்தலா என்ற படத்தில் நடிக்கிறார். சொந்தமாக படக்கம்பெனி துவக்கியுள்ளார். முதலில் குறும்படத்தை தயாரித்த இவர். இப்போது திரைப்படத்தை தயாரிப்பதுடன், இயக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். சுற்றுலாவுக்கு சென்ற போது, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை படமாக்குகிறார்.






      Dinamalar
      Follow us