sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சினிகடலை

/

சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : ஆக 16, 2025 11:14 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட வேலைகள் தடை

நடிகர் தர்ஷன் நடிக்கும், தி டெவில் படப்பிடிப்பு முடிந்து, திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. ஆகஸ்ட் 15ல் படத்தின் பாடலை வெளியிட, படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ரேணுகாசாமி கொலை வழக்கில், தர்ஷனின் ஜாமின் ரத்தானதால், மீண்டும் அவர் சிறைக்கு சென்றுள்ளார். இதனால் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மூன்று, நான்கு படங்களில் நடிக்க, தர்ஷன் கையெழுத்திட்டுள்ளார். அவர் கைதானதால், படத்தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என, தெரியாமல் கையை பிசைகின்றனர். பட வேலைகள் தடைபட்டுள்ளன.

மலையை சுற்றி...

கன்னடத்தில் சமூக அக்கறை கொண்ட படங்கள், அவ்வப்போது திரைக்கு வருகின்றன. அந்த வரிசையில், 'சாரங்கி' சேர்ந்துள்ளது. இதில் வெறும் இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளனர். மனிதர்கள் அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தபடி, வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. எதிர்பாராமல் பிரச்னைகள் ஏற்படும் போது, என்ன செய்கின்றனர் என்பதே கதையாகும். திரில்லர் கதை கொண்டது. கார்த்திக் சந்தர், ஸ்வேதா அரகெரே, நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சாரங்கி என்பது ஒரு மலையின் பெயர். மலையை சுற்றி என்ன நடக்கிறது என்பதை, இயக்குனர் காண்பித்து உள்ளார். இப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்டு, அதன்பின் கர்நாடகாவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

* நாயகன் ஹனுமான்

தயாரிப்பாளர் வாசுதேவ் தயாரிக்கும், பிங்காக்ஷா படம் திரைக்கு வர தயாராகிறது. ஆஞ்சநேயருக்கு, பஜ்ரங்கி, ஹனுமான் என பல பெயர்கள் உள்ளன. இதில் பிங்காக்ஷாவும் ஒன்றாகும். இது சமஸ்கிருத வார்த்தையாகும். படத்தின் கதைக்கு பொருத்தமாக இருந்ததால், இந்த பெயரை வைத்தார்களாம். படத்தின் நாயகனின் குடும்பம் துஷ்டசக்தியிடம் சிக்குகிறது. தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே, படத்தின் கதையாகும். சந்தோஷ்குமார் நாயகனாகவும், ரிஷாகவுடா, ஐரா மேனன் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். மங்களூரு, சிக்கமகளூரு, கொச்சி உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

தாமதம் ஏன்?

மூத்த நடிகை மாலாஸ்ரீயின் மகள் ஆராதனா ராம், காடேரா படம் மூலம் திரையுலகில் நுழைந்தவர். இந்த படம் திரைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும், புதிய படத்தில் நடிக்கவில்லை. முதல் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா என்ற கேள்வி எழுந்தது. தற்போது அவர் நெக்ஸ் லெவல் என்ற படத்தில், உபேந்திராவுக்கு நாயகியாக நடிக்கிறார். படத்துக்கு புதிய முகம் தேவைப்பட்டது. இதற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்பதால், படக்குழுவினர் தேர்வு செய்தார்களாம்.

* கிருஷ்ணரான நடிகை மகள்

பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையில், பலரும் தங்களின் குழந்தைகளுக்கு, கிருஷ்ணர் வேடம் போட்டு மகிழ்வர். இதற்கு நடிகையரும் விதி விலக்கு அல்ல. நடிகை பிரணிதா சுபாஷ், தன் மகன் ஜெய் கிருஷ்ணனுக்கு, கிருஷ்ணர் வேடம் போட்டு, பண்டிகை கொண்டாடினார். அதே போன்று நடிகை ஹர்ஷிகா பூனச்சாவும், தன் மகள் திரிதேவி பொன்னக்காவுக்கு, கிருஷ்ணர் வேடம் அணிவித்திருந்தார். குழந்தைகளின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. குழந்தைகளுக்கு வாழ்த்து குவிந்துள்ளது.

நிறைவேறிய ஆசை

ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ஹலகலி திரைப்படத்தில், நடிகர் தனஞ்செயா நாயகனாக நடிக்கிறார். இது வரலாற்று படமாகும். அவருக்கு ஜோடியாக சப்தமி கவுடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரலாற்று படம் என்பதால், இரண்டு பாகமாக திரையிட, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் தனஞ்செயா, 'ஜடகா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுவரை பல கதை, கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு, வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்ற, ஆசை இருந்தது. இப்போது அது நிறைவேறியுள்ளது.






      Dinamalar
      Follow us